Sunday, 12 March 2017

அட கூலிப் பயலுகளா!?

இன்று  நம் தமிழ் மக்கள் மட்டு மல்ல, அனை வரும் குழம்பி யுள்ளதாக

'நி''னைத்து'

அவலை 'நி' னைத்து  ரலையா ட்டும்  தற்குறிக்கு .,

தமிழ் என்ன உன் தோட்டத்தில் உள்ள களையா. பிடுங்கி எறிய.

நேற்று வரை...., நீ இருந்த இட மெமக்கு மட்டு மல்ல உண்மை தமிழர்

யாருமறி ந்தது. கனவு அது நீ காணலாம். அது தவறி ல்லை.

ஆனால் தமிழரை குறைத்து மதிப்பிட்டு நீ காண்பது பகல் கனவே.

பலிக்கா துன் கனவு. வேறு பணி யிருப் பின் போய் பார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திலேயே  நீ ஜாக்கிரதை யாய் தள்ளி நின்று

ரோட்டோரமாய்   'ப'ரோட்டாவை  நக்கி   தின்றதை தமிழகமே கண்டது.

அண்ணா பொழுது விடிஞ் சாச்சு . நாளைக்காவது  நல்லது எதையாச்சும்

பு துசா சொல்லி கூவு. 

Tuesday, 7 March 2017

இழந்ததை மீட்போமா! இருப்ப'தை' காப்போமா?

தாமிரபரணியை  காக்க களம் காணும்  இளைஞர்களுக்கு முதல் வணக்கம்.

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ். என்ற மூத்தோர்  சொல்லை   கவனத்தில் கொள்ளாத  குற்றத்தின் தண்டனையை இதோ நாங்கள் அனுபவிக்கிறோம்.

 இங்கே அந்நியனுக்காக காலணி தயாரிக்க எம் மவர் எடுத்திட்ட ஊசி, முதலில் பாய்ந்தது ஏழை விவசாயியின் கண்ணில்தான்.

அன்று எம் முன் னோர் கண்டிக்க  தவறியதன் விளைவு, இதோ                  
இங்கு நம் கண் முன்னர் மண்ணை மலடாக்கி, நண்ணீரை நஞ்சாக்கி, இயற்கை காற்றை  விஷ வாயு வாக்கி விவசாயியை தன் மண்ணிலே அகதியாக்கியது தான் நம் அரசியலாளரின் அரை நூறாண்டு கடத்திய சாதணை.

இது தொடர்ந்திட அனுமதித்தால்...?

நம் அடுத்தலை முறையின் அழிவுக்கு தோரணம் கட்டும் பாவம் செய்தோராவோம்.

பாலாற்றை மீட்டெடுப்போம். விவசாயிகளை காப்போம். 

Tuesday, 28 February 2017

நெடுவாசல் நம் தலைவாசல் ஆகுமோ...!...?,

சபிக்கபட்ட மாணுடரின் துயர் நீக்க
இன்னு மொரு இறை தூதர்
இது வரை பிறக்கவில்லை.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண
இது வொன்றும் அண்ணல் ஆட்சியோ,!
அறிஞர் ஆட்சியோ,? அல்ல.

சிரிப்பில் கூட குற்றம் காணு வோரின்
ஏவலுக்கு அடி பணிய காத்திரு க்கும்..,
இவர்களா? மக்கள் துயர் நீக்கிட
போகிறார்கள்.

'நெடுவாசல்'
இனி நம்  "தலை வாசல்"  
ஆம் இனி அது நம்
இன்னல்  களை
களைந்திடும்,
தலைவா சல்

இனி நமக்கு குரல் தர
இன்னு மொரு தலைமை
தேவையில்லை.

Thursday, 16 February 2017

கட்டுப்பாடு என்பது ...?

அவுத்து உட்றா  மாட்ட,  இதை எங்கள் பகுதியில் நடந்து வந்த மஞ்சு விரட்டின் போது பல முறை பலமாக கேட்டிருக்கிறேன்.  இப்பொழுது காணும் காட்சிகள் வியப்பை விட அதிக வேதனை தருகிறது. கட்டுப்பாடு என்பது கட்டிப் போட்டு பெறுவதல்ல. கட்டுகளை களைந்து துணிந்து எதிர் கொள்ளும் தைரியமுள்ள நேர்மறை குணம் கொண்ட ஓர் நேர்மையான ஆளுமை திறன் உள்ள தலைவனைத்தா நாம் தேடுகிறோம். கிடைத்தால்  'மகிழ்ச்சி" 'தவறி' தவறினால் நாம் செய்த தவமல்ல 'தவற்றினால் 'நா' மட்டுமல்ல நமது அடுத்த தலைமுறைக்கு நாம் பெற்ற சாபத்தைத்தான் வரமாக தரப் போகிறோமா??? 

Thursday, 24 December 2015

புலிமேட்டில் ஒரு புதுக் குற்றாலம்

 நீரில்லாத ஆறு,
சாமியில்லாத கோவில்,
இப்படி ஒரு ஊரு அதுதான் வேலூரு.
அப்டீன்னு சொல்லி கிண்டலடிச்ச மக்களே... !

உங்க கிண்டலை பொறுத்து கொள்ள முடியாத வானம் கொட்டித் தீர்த்தது. அதன் பலனாக இதுவரை வெளியே தெரியாமல் இருந்த ஒரு குட்டிக் குற்றாலம் இப்போ வெளிப்பட்டிருக்கிறது. வேலூருக்கும் அணைக்கட்டுக்கும் இடையில் ஊசூர் எனும் கிராமத்தின் அருகில் உள்ள ''புலிமேடு'' எனும் அழகிய அமைதியான சிற்றூரை ஒட்டியுள்ள 'பெரியமலை'' எனும் ஜவ்வாதுமலையின் தொடர்ச்சியாக உள்ள மலையடிவாரத்தில் அன்மையில் பெய்த பெருமழையின் பலனாக ஒரு நீர்வீழ்ச்சி வெளிப்பட்டுள்ளது.இத்தனை அருமையான இடம் இதுவரை வெளி உலகம் அறியாமல் இருந்துள்ளது. ஒருவகையில் அது நன்மையே. இதோ மணிதர்கள் பார்வைக்கு தெரிய வந்ததும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைவரும் குடும்பத்துடன் வந்து அருவியில் குளித்து களித்து செல்கின்றனர். அதோடு விட்டால் மகிழ்ச்சியே.

ஆனால்....?!

நட்பு வட்டாரத்துடன் வரும் பலர் சற்றும் மற்றவர்கள் பற்றிய அக்கறை இன்றி தங்கள் மனம் போனபோக்கில் கையோடு கொண்டு வரும் தின்பண்டங்கள். மற்றும் இத்யாதி பொருட்கள் அடங்கிய கழிவுகளை வீசிச்செல்வதும் இயற்கை வரமாக தந்த நீரில் சோப்பு,ஷாம்பு,மற்றும் சீயக்காய்தூளை பயன்படுத்தி அசுத்தப்படுத்துவதும் வேதனையளிக்கிறது.

இப்படி ஒரு அழகிய நீர்வீழ்ச்சி உள்ள இடத்தில் மூத்தகுடிமக்கள், பெண்கள், மாற்று திறனாளிகள், மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கென உரிய ஏற்பாடுகளை செய்தால் நன்றாக இருக்கும்.

பின் குறிப்பு : அழகிய நீர்வீழ்ச்சியை எடுத்த படங்களை தெளிவாக பதிவிட இயலவில்லை. அதன் காரணமாகவே சிறியதாக தந்துள்ளேன்.Thursday, 10 December 2015

எதையும் மறுக்க வேண்டாம்.

சென்னை நிலவரம் அறிந்துகொள்ள சென்னையில் உள்ள  யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்பு கொள்ள முடிந்த ஒரு சில பதிவர் அன்பர்களிடம் பேசிகொண்டிருக்கிறேன். அவ்வாறு நேற்று மாலை ஒரு பதிவருக்கு அலைபேசியில் அழைத்த போது யாருடனோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்., ஒட்டுகேட்பது தவறுதான், நாகரிகம் இல்லாத செயல்தான் ஆனால் எனக்கு வேறு வழியில்லை. அழைப்பை துண்டித்தால் மீண்டும் தொடர்பு கொள்ள இயலாமல் போய் விடுமோ? அவர் தொடர்பு கொள்ள அவரது தொலைபேசியும், வேலை நிறுத்தம் செய்தால் என்ன செய்வது என்று காத்திருந்தேன். இடையிடையே ஹலோ ஹலோ என்று அழைத்து பார்த்தேன்.

இதெல்லாம் ஓரிரு நிமிடங்களில் முடிந்துவிட்டது. கடைசியில் அவர் கவனம் அலைபேசி பக்கம் திரும்பியதும் பேசினார். அப்போது பேசியதில் அவரது வீட்டிற்கு யாரோ நிவாரண பொருட்களை கொண்டு வந்து தர முன்வந்ததாகவும் தமக்கு அவை வேண்டாம் என்றும் மறுத்ததாகவும் சொன்னார். மேலும் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவை போய் சேர்வதுதானே முறை என்றும் சொன்னார். மனம் நெகிழ்ந்தேன்.

இவர்போன்ற தன்னலம் கருதா உள்ளங்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள்.

தயவு செய்து உங்களை தேடி வந்து தரும் பொருட்களையோ உணவு பண்டங்களையோ யார் கொடுத்தாலும் அது அரசோ தனியார் நிறுவணங்களோ தனி நபரோ யாராக இருந்தாலும் மறுக்காதீர்கள். காரணம் அவர்கள் தருவது வெறும் பொருட்களல்ல உங்கள் முகம் அறியா உறவுகளின் அன்பு அதில் கலந்திருக்கிறது. அதை மறுப்பதன் மூலம் அவர்களின் அன்பை மறுத்த குற்றத்திற்கு ஆளாகிவிடாதீர்கள்.

மேலும் உங்கள் பகுதியில் ஒரு நான்கு ஐந்து வீடுகளில் வேண்டாமென மறுத்தால் உதவி செய்ய வருபவர்களுக்கு இந்த பகுதியில் யாருக்கும் பாதிப்பில்லை எனும் நினைப்பு வந்து உண்மையாகவே உதவி தேவைப்படும் யாரோ ஒரு குடும்பம் பாதிப்புக்குள்ளாக நேரிடுமே அன்பர்களே.

உங்களுக்கு வேண்டாம் எனும் மன சுத்தத்தை கொடுத்த இயற்கை உங்களிடம் தரும் நிவாரணப்பொருட்களை பெற்று நீங்களே உண்மையில் உதவி தேவைப்படும் நபர்களை தேர்ந்தெடுத்து வழங்கலாமே. அல்லது இவ்வாறு சேரும் பொருட்களை தங்களால் வழங்க இயலாத நிலையில் இந்திய செஞ்சிலுவை சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்களிடம் சேர்பித்துவிடலாமே..

குஜராத் பூகம்பம் ஏற்பட்ட போது நான் அரக்கோணம் அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பணிபுரிந்து வந்தேன். அப்போது ஊடகங்களில் கண்ட காட்சிகளால் மனம் பதைத்து உடன் பணிபுரிபவர்களிடம் ஏதாவது செய்யலாமே என்று கேட்டதுதான் தாமதம் சில மணி நேரங்களில் பணியாளர்கள் மட்டும் தருவதாக சொல்லி சென்றவர்கள் கிராமம் முழுவதுமே சுற்றி சுழன்று மூட்டை மூட்டையாய் உணவு பொருட்களும் பெட்டிபெட்டியாய் உடைகளையும் குவித்து விட்டார்கள். பிறகு யாரிடம் சேர்பிப்பது என்ற கேள்வியுடன் முழுமையாய் போய் சேர வேண்டுமே என்ற கவலையும் ஏற்பட்டது.

அந்த நேரம் பார்த்து ஜூனியர் விகடனில் எங்களுக்கு உதவவே ஒரு பெட்டி செய்தி வந்திருந்தது. அதில் நிவாரணப்பொருட்களை பெற்று இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சென்னை கிளை குஜராத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் அதன் முகவரியையும் வெளியிட்டிருந்து.

அந்த முகவரி
இந்திய செஞ்சிலுவை சங்கம்
பழைய எண் 50 மாண்டியத் சாலை
ஓட்டல் அம்பாசிடர் பல்லவா அருகில்
எழும்பூர்


முகவரியின் மற்ற விவரங்கள் நினைவில் இல்லை.

இந்த முகவரிக்கு அரக்கோணத்தில் ரயில் நிலையத்தில் சேர்த்துவிட்டால் போதுமென்று ஒரு டிராக்டரில் போட்டுக்கொண்டு எங்கள் அலுவலக படையுடன் ஒரு நாள் விடுப்பெடுத்து கிளம்பினோம். ரயில் நிலையத்தில் சென்று சேர்பித்து விட்டு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டுமென்று கேட்டால்......

அங்கிருந்தவர்கள் இத்தகைய பணிகளுக்கு எந்தவிதகட்டணமும் வசூல் செய்வதில்லை என்று  சொல்லி பொருட்களை எடை நிறுத்தி நிவாரண பொருட்களை பெற்றதற்கான அத்தாட்சியை வழங்கி எங்களுக்கு நன்றி சொல்லி உற்சாகப்படுத்தினார்கள்.

இந்த அனுபவம் இன்றும் மனதிற்கு இதமாக உள்ளது.

எனவே தங்களை மீண்டும் வேண்டுகிறேன். யாருடைய அன்பையும் மறுக்காதீர்கள். உங்களால் இயன்றதை செய்யுங்கள்.
எதையும் மறுக்க வேண்டாம்.

Tuesday, 8 December 2015

பேராசைக்கார பெண்மணி

இன்று காலை டூத் பேஸ்ட் வாங்க கடைக்கு போயிருந்தேன். அங்கு கண்டது என் மனதை தைத்தது. அதை முதலில் சொல்லி விடுகிறேன்.

கடையின் எதிரிலேயே ஒரு பாழடைந்த குடிசை சத்தியமாய் அது மழையால் பாதிக்கப்பட்ட குடிசையல்ல என்பது கண்டதும் தெரிந்துவிட்டது . ஆனால் அந்த குடிசையின் உரிமையாளர் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அதுவும் விதவை. ? . ஆனால் ஏழையல்ல என்பதும் போலி நாடகம் ஆடுகிறார் என்பதும் அங்கிருந்தவர்கள் சொல்லி தெரிந்து கொண்டேன்..

அந்த பெண்மணி உடன் சிலரை வைத்துக்கொண்டு மிக சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.

இத்தனைக்கும் எங்கள் பகுதியில் பெரிதாக எந்த பாதிப்புமில்லை..

நான் அவருடன் இருந்த சிலரைக் கேட்ட கேள்வி இது

ஏங்க இது உண்மையிலயே மழையால இடிஞ்ச குடிசைதானா ?

அவர்கள் தந்த பதில்

சார் அந்த பொம்பளைக்கு இதுதான் பொழப்பே!

அவர்களுக்கு நான் சொன்ன பதில்

இந்த பொழப்புக்கு பிச்சையெடுக்கலாம்..

 பெரியவங்க பாத்திரம் அறிந்து பிச்சையிடுன்னு சொன்னத மட்டும் நான் ஏத்துக்குறேன்.

உதவி செய்யுற மக்களே உஷாருய்யா உஷாரு..