Sunday, 2 November 2014

நாலு பேரு நல்லா இருக்கனும்னா !?

நாலு பேரு நல்லா இருக்கனும்னா !?
தப்பில்ல.. எதுவும் தப்பில்ல
அப்டின்னு வேலு நாயக்கர் சொன்னதை நம்பி..!
கீழ்கண்ட பதிவை 
COPY & PAST செய்து வெளியிடுகிறேன். இதில் எனக்கு வெட்கமே இல்லை..

ரத்த சேவைக்காக ஓர் இணையதளம் - தெரிந்து கொள்வோம்.

வசரமாக இந்தக் குரூப் ரத்தம் தேவை என்கிற குறுஞ்செய்தியோ அல்லது மெயிலோ வந்தால் அதை ஈஸியாகப் பார்வேர்டு செய்துவிட்டு போகிறவர்கள்தான் இன்று அதிகம். ஆனால், அவசரத் தேவைக்கு ரத்தம் கொடுக்க முன்வருபவர்கள் மிகக் குறைவுதான்.

இந்த நிலையை மாற்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷெரீப் என்கிற இளைஞரின் முயற்சியால் தொடங்கப்பட்ட, friends2support.org என்ற இணையதளம், அகில இந்திய அளவில் ரத்த தேடலுக்கான ஒரே இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது.
“ரத்தம் தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். ரத்தம் கிடைக்காமல் யாரும் உயிரிழந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். ‘Each One- Reach One’ என்பதே எங்கள் நோக்கம்” என்கிறார் friends2support.org என்ற இணையதளத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார்.

“இந்த இணையதளத்தைத் தொடங்கிய ஷெரீஃப், ஐதராபாத்தைச் சேர்ந்தவர். ஐதராபாத்துல குறிப்பிட்ட ரத்த குரூப் கிடைக்காமல், வரிசையா உயிர்கள் பலியான கோர சம்பவம் அவரை, ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணிருக்கு. ரத்தம் கிடைக்காம இறக்குறவங்க இனியும் அதிகரிக்கக் கூடாதுங்கிறதுக்காக, இந்த இணையதளத்தை ஆரம்பிச்சார்.
ஆரம்பிக்கும் போது வெறும் 200 பேர் தான் இருந்தாங்க. அதுவும் அவங்க எல்லாரும் ஷெரீஃபோட ப்ரெண்ட்ஸ்தான். எதுவும் தொடங்கும்போது உடனே வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்க முடியாது. அதனால தொடர்ந்து செயல்பட்டார். சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வழியாக ரத்த சேவை குறித்து தெரிய வந்ததும் நிறைய நண்பர்கள் ரத்தக் கொடையாளர்களாக இணைஞ்சாங்க. இப்போ, இந்த இணையதளத்தில் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்கள், மாவட்டங்கள், தாலுகா தலைமையகங்கள், முக்கிய நகரங்கள்னு அனைத்தையும் பதிவு செஞ்சிருக்கோம்.
ஒவ்வொரு நகரத்திலும் உள்ள குருதிக் கொடையாளர்கள் அவர்கள் எந்தக் குரூப் ரத்தத்தைச் சேர்ந்தவங்க, அவங்க செல்போன் நம்பர் உட்பட இணையத்தில் பதிவு செய்யும் வசதி இருக்கு. இந்த வசதியைப் பயன்படுத்தி இந்தியாவுல எங்க இருந்து வேணும்னாலும் எந்த வகை ரத்த தானம் செய்பவர்களையும் இடைத்தரகர்கள் இல்லாமல் உடனடியாகத் தொடர்பு கொண்டு ரத்த தானம் பெற முடியும்.
அதேசமயம், ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள ரத்த தான அமைப்புகள் எங்களுக்கு உதவி செஞ்சாங்க. கிட்டத்தட்ட எங்களோட இணையதளம் மூலம் இதுவரை சுமார் 2 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கு. 1.5 லட்சம் பேர் ரத்தக் கொடையாளர்களாக இருக்காங்க.

எங்க இணையதளத்துல ஒரு முறை ரத்தம் கொடுத்தா, அப்போதிலிருந்து 90 நாட்களுக்கு அவங்களோட பெயர் தானாகவே இணையதளத்துல இருந்து நீக்கப்பட்டுவிடும். அதேபோல், 90வது நாள் அந்த நபருக்கு, ‘நாளை முதல் நீங்கள் ரத்த தானம் செய்யலாம்’ என மெசேஜூம் போய் விடும். இணையதளத்துலயும் அவங்க பேர் இருக்கும்.

அதே மாதிரி, யார் ரத்த தானம் செய்யலாம், ரத்தம் எவ்வளவு நாளுக்கு ஒரு முறை தரணும். ரத்த தானம் செஞ்ச பிறகு என்ன செய்யணுங்கிற விழிப்புணர்வை தகுந்த நிபுணர்களை வெச்சு, பள்ளி, கல்லூரிகளில் முகாம்கள் நடத்தி வருகிறோம்.
ஒரு சிலர் ரத்தம் கொடுக்கிறேன்னு பதிவு செஞ்சிருவாங்க. திடீர்னு முடியாதுன்னு சொல்லிடுவாங்க. அப்படிப்பட்டவங்க இந்த இணையதளத்துல ‘ரிப்போர்ட்’ பகுதியில் அந்த விபரத்தை பதிவு செய்யணும்.

இப்படிப் பதிவு செஞ்ச பிறகு டோனர்களின் பெயர்கள் உடனடியாக லிஸ்ட்டில் இருந்து நீக்கப்பட்டு விடும்.

சேவைக்கு அங்கீகாரம்

எந்தச் சேவைக்கும் அங்கீகாரங்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம். அப்படிப்பட்ட அங்கீகாரம்தான் அந்தச் சேவை தொடர்வதற்கு ஊக்கமாக இருக்கும். அப்படி, எங்களோட இந்த இணையதளச் சேவைக்காக ‘லிம்கா விருது’ உள்ளிட்ட பல விருதுகள் கிடைச்சிருக்கு. ஆஸ்திரியாவைச் சேர்ந்த ‘வேர்டு யூத் சம்மிட்’ அமைப்பானது வருடந்தோறும் சமூகச் சேவை புரியும் அமைப்புகளுக்கு விருதுகளைக் கொடுக்கிறது வழக்கம். போன வருஷம் எங்களது அமைப்பின் சேவையைப் பாராட்டிக் கொடுத்தது.
வசதியும் - வருங்காலத் திட்டமும்

ஆண்ட்ராய்டு, ஐ போன் மற்றும் விண்டோஸ் போன் மூலமும் இந்த வசதிகள் பெறக் கூடிய புதிய இலவச அப்ளிகேஷனை போன வருஷம்தான் அறிமுகப்படுத்தினோம். கேரள மாநிலத்துக்கான ஒருங்கிணைப்பாளர் ஜெயந்த் ஜஸ்டின்தான் உருவாக்கித் தந்தார்.

தற்போது இணையத்தைப் பயன்படுத்துகிறவர்கள் மட்டுமே ரத்த தானம் செய்ய முடியும். அதேசமயம், படிப்பறிவு இல்லாதவர்களும், இணையம் பற்றித் தெரியாதவர்களும் ரத்தம் தேவைப்படும்போது என்ன செய்ய முடியும். அவர்களுக்குப் பயன்படும் வகையில், toll free நம்பர் அறிமுகப்படுத்தறத் திட்டமும் இருக்கு.

நன்றி - மு.அழகர்பாரதி 
மற்றும் வேடந்தாங்கல்


Monday, 27 October 2014

நன்றியை சொல்ல வேறு வார்த்தை இருக்கா?

அழைத்தவர்களுக்கும், வரவேற்றவர்களுக்கும், நிகழ்ச்சி சிறப்பாக நடந்திட பாடுபட்டவர்களுக்கும் என் நன்றியை தெரிவிக்க விழைகிறேன். ஆனால் என்னிடம் இப்போதைக்கு நன்றி என்கிற வார்த்தையை தவிர வேறெதுவும் இல்லை. கிடைத்ததும் பகிர்வேன்.

Wednesday, 20 August 2014

ஒரு இனிய அனுபவம்

சில அனுபவங்கள் வாழ்வில் மறக்க முடியாததாகவும்,
சில அனுபவங்கள் மறக்க வேண்டியதாகவும்,
சில வாழ்வில் ஒளிகாட்டும் விளக்காகவும்
சில இருள் நிறைந்ததாகவும் அமைந்து விடும்.
அவ்வாறின்றி எனக்கு
ஓர் அற்புதமான அனுபவம்
இனிமை தரும் மகிழ்வான அனுபவம்.
மாற்றத்தை உருவாக்கிய அனுபவம்.
மலர்ச்சியை ஏற்படுத்திய அனுபவம். அன்மையில் ஏற்பட்டது.
அதுகுறித்து விவரிப்பதற்க்கு முன் அங்கு என் கண்முன் நடந்த சில அதிசயங்களை பகிர்கிறேன்.

1) சாதாரணமாக குறைந்தது சுமார் 10000 பேருக்கு மேல் கூடிய ஒரு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் குறைந்தது எத்தனை காவல்துறை உயர் அதிகாரிகள், எத்தனை அலுவலர்கள், எத்தனை துணை அலுவலர்கள், எவ்வளவு காவலர்கள், மற்றும் வாகனங்கள் தேவையிருக்கும்?.

ஆனால் நான் கண்ட அந்த கூட்டத்தில் பெயருக்கு கூட ஒரு காவலரைக்கூட காணவில்லை.

2) அவ்வளவு பேர் கூடுமிடத்தில் சாதாரணமாக எவ்வளவு சத்தம் மற்றும் இரைச்சல் ஏற்படும்?.

ஆனால் அங்கு நான் கண்டது அமைதியை தவிர வேறில்லை.

3) நம் வீட்டு விசேஷத்திலேயே உணவு பரிமாறும்போது எத்தனை குறைகள் நடந்துவிடுகிறது?.

ஆனால் அத்தனை பேருக்கு உணவு பரிமாறுகையில் ஒரு சிறு தள்ளுமுள்ளு கூட நடைபெறவில்லை.

மேற்கண்ட நிகழ்வுகள் புணைந்து சொல்லப்பட்டவை அல்ல. அனுபவமாக உணர்ந்தவை.

Wednesday, 6 August 2014

பறக்கும் சாலையில் ப(ண)யமாய் ஒரு பயணம்

சில தினங்களுக்கு முன் அதிகாலையில் ஒரு உறவினரின் இல்ல விழாவுக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு நகரத்தையொட்டிய கிராமத்திற்க்கு இரு சக்கர வாகனத்தில் பயணிக்க நேர்ந்தது. அதே சாலையில் பலமுறை பயணித்திருந்தாலும் அந்த பயணம் புதிதாகவும் திகிலாகவும் அமைந்து விட்டது.

சாதாரணமாக 40 கிமீ வேகத்தில் சென்றாலே இரண்டு மணி நேரத்தில் சென்று விடக்கூடிய தூரம்தான். அதிலும் பாதி தூரம் நரகங்களை இணைக்கவென்றெ அமைக்கப்பட்ட தங்க நாற்கர சாலையும் மீதி கிராம மக்களுக்கென்று உள்ள சாதாரண (தகர) சாலையுமாக இருந்தது.

முன்பெல்லாம் கணரக வாகன ஓட்டுநர்களை எமனின் தூதர்கள் என கேலி பேசுவதுண்டு. தற்போது அதை காரோட்டிகள் கைப்பற்றி விடுவார்கள் போல் தோன்றுகிறது.

சாதாரணமாக சாலையில் முந்துவதற்க்கு உள்ள விதிமுறைகளில் முக்கியமானவை
1) வலது பக்கத்தில் மட்டுமே முந்த வேண்டும்.
2) முந்துவதற்க்கு முன் முன்னே செல்லும் வாகனத்திற்கு சமிக்சை செய்ய வேன்டும்.

இந்த குறைந்த பட்ச விதிகளைக்கூட பின்பற்ற தவறுகின்றனர். (அல்லது) மதிக்க மறுக்கின்றனர்.
இதன் காரணமாக சாலையில் பயணப்படும் சாமான்ய மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள், பல நேரங்களில் உயிரின் மதிப்பை உணர மறுக்கும் சில வாகன ஓட்டுநர்கள் எந்த பாதிப்புக்கும் ஆளாவதில்லை. ஆனால் அப்பாவி மக்கள் விபத்துக்குள்ளாகி காயப்படுவதும் சில நேரங்களில் உயிரிழப்பதும் தொடர்கிறது.

அன்று நான் பார்த்தது அந்த அதிகாலை நேரத்திலேயே சுமார் 100 க்கும் மேற்பட்ட கார்கள் இருக்கும்.

அவரவர் அவசரத்துக்கு விரைந்து செல்வதை தவறென்று சொல்லவில்லை.
ஆனால் அன்று பயணித்த கார்களில் பெரும்பாலானவை எந்த வரைமுறைக்கும் கட்டுப்படாமல் இடது வலது என மாறி மாறி முந்திச்சென்றன.

இதன் காரணமாக அதிகாலை வேளையில் வாழ்க்கையை துவங்கும் கீரை வியாபாரிகள், பால்காரர்கள், விவசாயிகள் மிரண்டு குழம்பி ஒதுங்கியதை கண்டு மனம் வருந்தினேன்.சாலையை அகலப்படுத்தி ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்துள்ளது பயணிப்பவர்கள் வசதிக்காத்தானே தவிர தங்கள் விருப்பம்போல் பறப்பதற்க்கு அல்ல என்பதை எப்போது உணர்வார்களோ?.

மேலும் இவ்வளவு வசதிகள் செய்ய முடிகின்ற அரசாங்கங்கள் சாலை பாதுகாப்பை கண்கானிக்க போக்குவரத்து காவலர்களை மட்டுமே சார்ந்திருக்காமல் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் சாலை விபத்துகள் பெருமளவில் குறையுமென நம்பலாம். செய்வார்களா?

Monday, 21 July 2014

வணக்கம் பண்ணையாரே வாங்க வாங்க பழகலாம்

வேலூரில் வெய்யிலின் தாக்கம் கொஞ்சம் குறைந்துள்ளது. இந்த சூழலில் எப்போதும் மற்றவர்களின் குறைகளை சுட்டி (இல்லையில்லை) குட்டி காண்பிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கும். என் மதிப்பு மிக்க ஒரு நண்பர். பெயரெல்லாம் வேண்டாமே. இப்போதைக்கு பண்ணையார் என்று வைத்துக்கொள்வோம். சாதாரணமாக வணக்கம் வைத்தால் கூட ம்கூம் நீ வணக்கம் வைத்துத்தான் நான் பெரியாளாக வேண்டிய நிலையில் இல்லை. நான் ஏற்கனவே பெரிய ஆள் தெரியுமா என்கிற தொனியில் பேசுபவர். 

இன்று என் நேரம். ரயிலடியில் காத்திருந்தேன் என் நண்பர் ஒருவரின் வருகைக்காக, ரயில் வருவதாக தெரியவில்லை. ரயில் தாமதமாக வருவதற்கான அறிவிப்பு மட்டும்தான் அதுவும் இரண்டு மணி நேரம். தாமதம் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதுதான் நம் பண்ணையார் தூரத்தில் வருவது கண்டு அதிர்ந்தேன். வேறு இடமாக இருந்திருந்தால் ஓடி ஒளிந்திருப்பேன். ஆனால் இப்போது தப்பிக்க முடியாத நிலை. காரணம் அவர் வரும் பாதையில் உள்ள வாகன நிறுத்தத்தை தாண்டித்தான் நான் போக முடியும். மேலும் அவருக்கும் எனக்கும் நன்கு அறிமுகமான ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் என்னை கவனித்துவிட்டனர். அவரிடம் பேச்சுவாக்கில் என் இருப்பை பற்றி சொல்லிவிட்டால்?. என்ன செய்வதென்று யோசிக்கின்ற நேரத்தில் பண்ணையார் உரத்த குரலில் கைபேசியில் பேசியபடி வந்து கொண்டிருந்தார்.. எப்படி தப்பிப்பது யாராவது தெரிந்தால்
சொல்லுங்களேன்..     

Thursday, 5 June 2014

உயிர் கொடுத்து ஒரு பாடம்

உயிர் காக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற உறவுகளுடன் வந்த அந்த குழந்தையின் பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் ஆறுதல் சொல்ல யாராலும் முடியாது. அவர்களின் கனவுகளை காவு கொண்டது மழை வெள்ளமல்ல. சாக்கடையை விட மோசமான அரசியலும் ஊழலும்தான்.

பெருமை பொங்க சொல்லிக்கொண்டார்கள் பாதாள சாக்கடை திட்டம் என்று
அந்த மேதைகளுக்கு உணர்த்தத்தான் இக்குழந்தை வெளி மாநிலத்திலிருந்து இங்கு வந்ததோ?. ஒரு அவசர காலத்திற்க்கு உள்ளே இறங்கும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அடைத்து கொண்டால் சரிசெய்ய உள்ளே இறங்கும் நபரின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்கிற குறைந்தபட்ச அறிவு கூடவா இருக்காது.

இந்த சாக்கடையை தோண்டுவது மட்டும் போதாது.
ஆக்கிரமிப்பை அகற்றுவது மட்டும் தீர்வாகாது.
கால்வாயின் மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை தயவு தாட்சன்யமின்றி அகற்றுவதோடு அவர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும்.

குப்பனும் சுப்பனும் செய்கின்ற சிறு பிழைகளுக்கு தண்டனை தரும் சமுதாயம். இப்படி கண்மூடித்தனமாக வளைக்கும் பெரிய மனிதர்களை கண்டு பயத்துடன் ஒதுங்கி செல்வதுதான் உண்மை.
இவர்களுக்கு பரிந்துகொண்டு ஆதரவாக எந்த கட்சி வந்தாலும் அவர்கள் முகத்திரையையும் கிழிக்க வேண்டும். மக்களின் வாக்குகளை பெற வரும்போது மட்டும் பிச்சைகாரர்கள் போல் நின்று விட்டு வென்றதும் அமைதிப்படைஅமாவாசைகளாய் மாறிய மனிதர்களும் இனியாவது திருந்த வேண்டும்.

இதையெல்லாம்தான் அந்த மகள் தன் உயிரை தந்து உணர்த்திவிட்டாள்.

மாற்றம் ஒன்று வர வேண்டும் என்று பேசினால் மட்டும் போதாது.
அந்த மாற்றம் நம்மிடமிருந்துதான் துவங்க வேண்டும் என்பதே  உண்மை.

Tuesday, 1 April 2014

ச்சிரிப்பு வருது ச்சிரிப்பு வருது ச்சிரிக்கச்சிரிக்க ச்சிரிப்பு வருது!

சகோ T.N.M. சொன்னது போலவே நடக்குது பாருங்க!
முக்கியமாய்..முக்கியமாய்.. என்ன நடந்தாலும் இந்த ....... பிடிச்ச அரசியல் மட்டும் உவ்..,(வே ).ண்டாம்னு விலகிப்போக நினைத்தாலும் ,. அது நம்மை விட்டு விலகுவதாகவும் இல்லை. நம்மை  - விடுவதாகவும் இல்லை.