Monday, 21 July 2014

வணக்கம் பண்ணையாரே வாங்க வாங்க பழகலாம்

வேலூரில் வெய்யிலின் தாக்கம் கொஞ்சம் குறைந்துள்ளது. இந்த சூழலில் எப்போதும் மற்றவர்களின் குறைகளை சுட்டி (இல்லையில்லை) குட்டி காண்பிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கும். என் மதிப்பு மிக்க ஒரு நண்பர். பெயரெல்லாம் வேண்டாமே. இப்போதைக்கு பண்ணையார் என்று வைத்துக்கொள்வோம். சாதாரணமாக வணக்கம் வைத்தால் கூட ம்கூம் நீ வணக்கம் வைத்துத்தான் நான் பெரியாளாக வேண்டிய நிலையில் இல்லை. நான் ஏற்கனவே பெரிய ஆள் தெரியுமா என்கிற தொனியில் பேசுபவர். 

இன்று என் நேரம். ரயிலடியில் காத்திருந்தேன் என் நண்பர் ஒருவரின் வருகைக்காக, ரயில் வருவதாக தெரியவில்லை. ரயில் தாமதமாக வருவதற்கான அறிவிப்பு மட்டும்தான் அதுவும் இரண்டு மணி நேரம். தாமதம் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதுதான் நம் பண்ணையார் தூரத்தில் வருவது கண்டு அதிர்ந்தேன். வேறு இடமாக இருந்திருந்தால் ஓடி ஒளிந்திருப்பேன். ஆனால் இப்போது தப்பிக்க முடியாத நிலை. காரணம் அவர் வரும் பாதையில் உள்ள வாகன நிறுத்தத்தை தாண்டித்தான் நான் போக முடியும். மேலும் அவருக்கும் எனக்கும் நன்கு அறிமுகமான ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் என்னை கவனித்துவிட்டனர். அவரிடம் பேச்சுவாக்கில் என் இருப்பை பற்றி சொல்லிவிட்டால்?. என்ன செய்வதென்று யோசிக்கின்ற நேரத்தில் பண்ணையார் உரத்த குரலில் கைபேசியில் பேசியபடி வந்து கொண்டிருந்தார்.. எப்படி தப்பிப்பது யாராவது தெரிந்தால்
சொல்லுங்களேன்..     

3 comments:

  1. உங்கள் வலைப்பக்கத்தில் நான் போட்டிருந்த பின்னூட்டங்களை காணோமே? நீக்கி விட்டீர்களா? பண்ணையாரைப் பார்த்தும் பயப்படுகிறீர்கள் என்றால் என்னைப் பார்த்துமா?

    ReplyDelete
  2. வாங்க தோழரே வருகைக்கு நன்றி. உங்களுடைய எந்த பின்னூட்டமும் கிடைக்கப்பபெறவில்லை. நீக்கக்கூடிய அளவுக்கு மோசமாக நீங்க என்ன சொல்லிடபோறீங்க. மேலும் அவர் நாம் பேசுவதை காதில் வாங்க மறுக்கும் பண்ணையார். ஆனா நீங்க அப்படியா. ஆகவே பயப்பட ஒன்றுமில்லை என் கணினிதான் பல நேங்களில் ஒத்துழைப்பதில்லை. அதன் காரணமாகவே அதிகம் பதிவிட முடிவதில்லை. மேலும் கணினி அனுபவத்தில் நான் இன்னும் LKG யே தாண்டவில்லை.

    ReplyDelete