Wednesday, 6 August 2014

பறக்கும் சாலையில் ப(ண)யமாய் ஒரு பயணம்

சில தினங்களுக்கு முன் அதிகாலையில் ஒரு உறவினரின் இல்ல விழாவுக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு நகரத்தையொட்டிய கிராமத்திற்க்கு இரு சக்கர வாகனத்தில் பயணிக்க நேர்ந்தது. அதே சாலையில் பலமுறை பயணித்திருந்தாலும் அந்த பயணம் புதிதாகவும் திகிலாகவும் அமைந்து விட்டது.

சாதாரணமாக 40 கிமீ வேகத்தில் சென்றாலே இரண்டு மணி நேரத்தில் சென்று விடக்கூடிய தூரம்தான். அதிலும் பாதி தூரம் நரகங்களை இணைக்கவென்றெ அமைக்கப்பட்ட தங்க நாற்கர சாலையும் மீதி கிராம மக்களுக்கென்று உள்ள சாதாரண (தகர) சாலையுமாக இருந்தது.

முன்பெல்லாம் கணரக வாகன ஓட்டுநர்களை எமனின் தூதர்கள் என கேலி பேசுவதுண்டு. தற்போது அதை காரோட்டிகள் கைப்பற்றி விடுவார்கள் போல் தோன்றுகிறது.

சாதாரணமாக சாலையில் முந்துவதற்க்கு உள்ள விதிமுறைகளில் முக்கியமானவை
1) வலது பக்கத்தில் மட்டுமே முந்த வேண்டும்.
2) முந்துவதற்க்கு முன் முன்னே செல்லும் வாகனத்திற்கு சமிக்சை செய்ய வேன்டும்.

இந்த குறைந்த பட்ச விதிகளைக்கூட பின்பற்ற தவறுகின்றனர். (அல்லது) மதிக்க மறுக்கின்றனர்.
இதன் காரணமாக சாலையில் பயணப்படும் சாமான்ய மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள், பல நேரங்களில் உயிரின் மதிப்பை உணர மறுக்கும் சில வாகன ஓட்டுநர்கள் எந்த பாதிப்புக்கும் ஆளாவதில்லை. ஆனால் அப்பாவி மக்கள் விபத்துக்குள்ளாகி காயப்படுவதும் சில நேரங்களில் உயிரிழப்பதும் தொடர்கிறது.

அன்று நான் பார்த்தது அந்த அதிகாலை நேரத்திலேயே சுமார் 100 க்கும் மேற்பட்ட கார்கள் இருக்கும்.

அவரவர் அவசரத்துக்கு விரைந்து செல்வதை தவறென்று சொல்லவில்லை.
ஆனால் அன்று பயணித்த கார்களில் பெரும்பாலானவை எந்த வரைமுறைக்கும் கட்டுப்படாமல் இடது வலது என மாறி மாறி முந்திச்சென்றன.

இதன் காரணமாக அதிகாலை வேளையில் வாழ்க்கையை துவங்கும் கீரை வியாபாரிகள், பால்காரர்கள், விவசாயிகள் மிரண்டு குழம்பி ஒதுங்கியதை கண்டு மனம் வருந்தினேன்.சாலையை அகலப்படுத்தி ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்துள்ளது பயணிப்பவர்கள் வசதிக்காத்தானே தவிர தங்கள் விருப்பம்போல் பறப்பதற்க்கு அல்ல என்பதை எப்போது உணர்வார்களோ?.

மேலும் இவ்வளவு வசதிகள் செய்ய முடிகின்ற அரசாங்கங்கள் சாலை பாதுகாப்பை கண்கானிக்க போக்குவரத்து காவலர்களை மட்டுமே சார்ந்திருக்காமல் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் சாலை விபத்துகள் பெருமளவில் குறையுமென நம்பலாம். செய்வார்களா?

2 comments:

 1. தம்பிக்கு எந்த ஊரு?!!!!! ஹஹஹ்ஹ் இல்ல நம்ம தமிழ் நாட்டைப் பத்தித் தெரியாம எழுதினதோணு தோணுது....

  தமிழ்நாடுதான் அதாவது தமிழ்நாட்டுச் சாலைகள்தான் இந்தியாவிலேயே சாலை விபத்துகளில் அதுவும் உயிர் காவு வாங்குவதில் முதன்மை இடம் பெற்றுள்ளது....என்ன பெருமை இல்லையா? வெறு எந்த ஒரு மாநிலத்திலும் கூட மூலை முடுக்குக் கிராமங்களுக்கு எல்லாம் பேருந்து வசதி இல்லை என்ற பெருமை பெற்ற தமிழ்நாடு உயிரைக் காவு வாங்குவதில் முதன்மை இடம்.....

  உலக விருதிற்கு பரிந்துரை செய்திருலாமா...தம்பி...??

  ReplyDelete
 2. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
  http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

  ReplyDelete