Thursday, 24 December 2015

புலிமேட்டில் ஒரு புதுக் குற்றாலம்





 நீரில்லாத ஆறு,
சாமியில்லாத கோவில்,
இப்படி ஒரு ஊரு அதுதான் வேலூரு.
அப்டீன்னு சொல்லி கிண்டலடிச்ச மக்களே... !

உங்க கிண்டலை பொறுத்து கொள்ள முடியாத வானம் கொட்டித் தீர்த்தது. அதன் பலனாக இதுவரை வெளியே தெரியாமல் இருந்த ஒரு குட்டிக் குற்றாலம் இப்போ வெளிப்பட்டிருக்கிறது. வேலூருக்கும் அணைக்கட்டுக்கும் இடையில் ஊசூர் எனும் கிராமத்தின் அருகில் உள்ள ''புலிமேடு'' எனும் அழகிய அமைதியான சிற்றூரை ஒட்டியுள்ள 'பெரியமலை'' எனும் ஜவ்வாதுமலையின் தொடர்ச்சியாக உள்ள மலையடிவாரத்தில் அன்மையில் பெய்த பெருமழையின் பலனாக ஒரு நீர்வீழ்ச்சி வெளிப்பட்டுள்ளது.



இத்தனை அருமையான இடம் இதுவரை வெளி உலகம் அறியாமல் இருந்துள்ளது. ஒருவகையில் அது நன்மையே. இதோ மணிதர்கள் பார்வைக்கு தெரிய வந்ததும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைவரும் குடும்பத்துடன் வந்து அருவியில் குளித்து களித்து செல்கின்றனர். அதோடு விட்டால் மகிழ்ச்சியே.

ஆனால்....?!

நட்பு வட்டாரத்துடன் வரும் பலர் சற்றும் மற்றவர்கள் பற்றிய அக்கறை இன்றி தங்கள் மனம் போனபோக்கில் கையோடு கொண்டு வரும் தின்பண்டங்கள். மற்றும் இத்யாதி பொருட்கள் அடங்கிய கழிவுகளை வீசிச்செல்வதும் இயற்கை வரமாக தந்த நீரில் சோப்பு,ஷாம்பு,மற்றும் சீயக்காய்தூளை பயன்படுத்தி அசுத்தப்படுத்துவதும் வேதனையளிக்கிறது.

இப்படி ஒரு அழகிய நீர்வீழ்ச்சி உள்ள இடத்தில் மூத்தகுடிமக்கள், பெண்கள், மாற்று திறனாளிகள், மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கென உரிய ஏற்பாடுகளை செய்தால் நன்றாக இருக்கும்.

பின் குறிப்பு : அழகிய நீர்வீழ்ச்சியை எடுத்த படங்களை தெளிவாக பதிவிட இயலவில்லை. அதன் காரணமாகவே சிறியதாக தந்துள்ளேன்.



Thursday, 10 December 2015

எதையும் மறுக்க வேண்டாம்.

சென்னை நிலவரம் அறிந்துகொள்ள சென்னையில் உள்ள  யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்பு கொள்ள முடிந்த ஒரு சில பதிவர் அன்பர்களிடம் பேசிகொண்டிருக்கிறேன். அவ்வாறு நேற்று மாலை ஒரு பதிவருக்கு அலைபேசியில் அழைத்த போது யாருடனோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்., ஒட்டுகேட்பது தவறுதான், நாகரிகம் இல்லாத செயல்தான் ஆனால் எனக்கு வேறு வழியில்லை. அழைப்பை துண்டித்தால் மீண்டும் தொடர்பு கொள்ள இயலாமல் போய் விடுமோ? அவர் தொடர்பு கொள்ள அவரது தொலைபேசியும், வேலை நிறுத்தம் செய்தால் என்ன செய்வது என்று காத்திருந்தேன். இடையிடையே ஹலோ ஹலோ என்று அழைத்து பார்த்தேன்.

இதெல்லாம் ஓரிரு நிமிடங்களில் முடிந்துவிட்டது. கடைசியில் அவர் கவனம் அலைபேசி பக்கம் திரும்பியதும் பேசினார். அப்போது பேசியதில் அவரது வீட்டிற்கு யாரோ நிவாரண பொருட்களை கொண்டு வந்து தர முன்வந்ததாகவும் தமக்கு அவை வேண்டாம் என்றும் மறுத்ததாகவும் சொன்னார். மேலும் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவை போய் சேர்வதுதானே முறை என்றும் சொன்னார். மனம் நெகிழ்ந்தேன்.

இவர்போன்ற தன்னலம் கருதா உள்ளங்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள்.

தயவு செய்து உங்களை தேடி வந்து தரும் பொருட்களையோ உணவு பண்டங்களையோ யார் கொடுத்தாலும் அது அரசோ தனியார் நிறுவணங்களோ தனி நபரோ யாராக இருந்தாலும் மறுக்காதீர்கள். காரணம் அவர்கள் தருவது வெறும் பொருட்களல்ல உங்கள் முகம் அறியா உறவுகளின் அன்பு அதில் கலந்திருக்கிறது. அதை மறுப்பதன் மூலம் அவர்களின் அன்பை மறுத்த குற்றத்திற்கு ஆளாகிவிடாதீர்கள்.

மேலும் உங்கள் பகுதியில் ஒரு நான்கு ஐந்து வீடுகளில் வேண்டாமென மறுத்தால் உதவி செய்ய வருபவர்களுக்கு இந்த பகுதியில் யாருக்கும் பாதிப்பில்லை எனும் நினைப்பு வந்து உண்மையாகவே உதவி தேவைப்படும் யாரோ ஒரு குடும்பம் பாதிப்புக்குள்ளாக நேரிடுமே அன்பர்களே.

உங்களுக்கு வேண்டாம் எனும் மன சுத்தத்தை கொடுத்த இயற்கை உங்களிடம் தரும் நிவாரணப்பொருட்களை பெற்று நீங்களே உண்மையில் உதவி தேவைப்படும் நபர்களை தேர்ந்தெடுத்து வழங்கலாமே. அல்லது இவ்வாறு சேரும் பொருட்களை தங்களால் வழங்க இயலாத நிலையில் இந்திய செஞ்சிலுவை சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்களிடம் சேர்பித்துவிடலாமே..

குஜராத் பூகம்பம் ஏற்பட்ட போது நான் அரக்கோணம் அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பணிபுரிந்து வந்தேன். அப்போது ஊடகங்களில் கண்ட காட்சிகளால் மனம் பதைத்து உடன் பணிபுரிபவர்களிடம் ஏதாவது செய்யலாமே என்று கேட்டதுதான் தாமதம் சில மணி நேரங்களில் பணியாளர்கள் மட்டும் தருவதாக சொல்லி சென்றவர்கள் கிராமம் முழுவதுமே சுற்றி சுழன்று மூட்டை மூட்டையாய் உணவு பொருட்களும் பெட்டிபெட்டியாய் உடைகளையும் குவித்து விட்டார்கள். பிறகு யாரிடம் சேர்பிப்பது என்ற கேள்வியுடன் முழுமையாய் போய் சேர வேண்டுமே என்ற கவலையும் ஏற்பட்டது.

அந்த நேரம் பார்த்து ஜூனியர் விகடனில் எங்களுக்கு உதவவே ஒரு பெட்டி செய்தி வந்திருந்தது. அதில் நிவாரணப்பொருட்களை பெற்று இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சென்னை கிளை குஜராத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் அதன் முகவரியையும் வெளியிட்டிருந்து.

அந்த முகவரி
இந்திய செஞ்சிலுவை சங்கம்
பழைய எண் 50 மாண்டியத் சாலை
ஓட்டல் அம்பாசிடர் பல்லவா அருகில்
எழும்பூர்


முகவரியின் மற்ற விவரங்கள் நினைவில் இல்லை.

இந்த முகவரிக்கு அரக்கோணத்தில் ரயில் நிலையத்தில் சேர்த்துவிட்டால் போதுமென்று ஒரு டிராக்டரில் போட்டுக்கொண்டு எங்கள் அலுவலக படையுடன் ஒரு நாள் விடுப்பெடுத்து கிளம்பினோம். ரயில் நிலையத்தில் சென்று சேர்பித்து விட்டு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டுமென்று கேட்டால்......

அங்கிருந்தவர்கள் இத்தகைய பணிகளுக்கு எந்தவிதகட்டணமும் வசூல் செய்வதில்லை என்று  சொல்லி பொருட்களை எடை நிறுத்தி நிவாரண பொருட்களை பெற்றதற்கான அத்தாட்சியை வழங்கி எங்களுக்கு நன்றி சொல்லி உற்சாகப்படுத்தினார்கள்.

இந்த அனுபவம் இன்றும் மனதிற்கு இதமாக உள்ளது.

எனவே தங்களை மீண்டும் வேண்டுகிறேன். யாருடைய அன்பையும் மறுக்காதீர்கள். உங்களால் இயன்றதை செய்யுங்கள்.
எதையும் மறுக்க வேண்டாம்.

Tuesday, 8 December 2015

பேராசைக்கார பெண்மணி

இன்று காலை டூத் பேஸ்ட் வாங்க கடைக்கு போயிருந்தேன். அங்கு கண்டது என் மனதை தைத்தது. அதை முதலில் சொல்லி விடுகிறேன்.

கடையின் எதிரிலேயே ஒரு பாழடைந்த குடிசை சத்தியமாய் அது மழையால் பாதிக்கப்பட்ட குடிசையல்ல என்பது கண்டதும் தெரிந்துவிட்டது . ஆனால் அந்த குடிசையின் உரிமையாளர் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அதுவும் விதவை. ? . ஆனால் ஏழையல்ல என்பதும் போலி நாடகம் ஆடுகிறார் என்பதும் அங்கிருந்தவர்கள் சொல்லி தெரிந்து கொண்டேன்..

அந்த பெண்மணி உடன் சிலரை வைத்துக்கொண்டு மிக சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.

இத்தனைக்கும் எங்கள் பகுதியில் பெரிதாக எந்த பாதிப்புமில்லை..

நான் அவருடன் இருந்த சிலரைக் கேட்ட கேள்வி இது

ஏங்க இது உண்மையிலயே மழையால இடிஞ்ச குடிசைதானா ?

அவர்கள் தந்த பதில்

சார் அந்த பொம்பளைக்கு இதுதான் பொழப்பே!

அவர்களுக்கு நான் சொன்ன பதில்

இந்த பொழப்புக்கு பிச்சையெடுக்கலாம்..

 பெரியவங்க பாத்திரம் அறிந்து பிச்சையிடுன்னு சொன்னத மட்டும் நான் ஏத்துக்குறேன்.

உதவி செய்யுற மக்களே உஷாருய்யா உஷாரு..

Monday, 7 December 2015

உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு சில வேண்டுதல்கள்...

இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
மணிதம் இன்னும் மரிக்கவில்லை
என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
நிறையவே நாம் ஜாக்கிரதையாக
செயல்பட வேண்டிய தருணம் இது...

அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
வேண்டுதல்கள்..

1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள்  உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.

2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில்  எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..

3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்,தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட USB மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.

4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.

5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள்  இடையூறுகள்
 செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும்.  

Saturday, 5 December 2015

எனக்கு சொரனை இருக்கு அப்ப மத்தவங்களுக்கு...?

அது எனக்கு தெரியாது...

எல்லோரும் வருத்தத்தில் இருக்கும்போது
இப்படியும் ஒரு செய்தி..
இது உண்மையா? பொய்யா ? வதந்தியா?

தெரியாது?

ஆனால் அது பொய்யாக இருக்க வேண்டும் என இயற்கையை இறைஞ்சுகிறேன்.

கா'ரணம்' காயத்திற்கு
மருந்திட வேண்டிய நாம்
வழிபட்ட

கடவுள்?!?!?!?!?!?!?!?!

தம் கட(னை)மை மறந்து
வழிப்பறி தான் தம் கொள்கை

வழி என்று ஒரு
வழியாய் வந்தபின் எனக்கும் வேறு
வழி தெரியவில்லை...

படிக்க நேரிட்டதால்
வியப்பும்,
கசப்பும்,

கலந்து
இட்ட பதிவே..
இது..
இதற்காக வருத்தப்படபோவதில்லை

இனியாவது வரட்டும்
இவர்களல்ல..
இவர்களுக்கு.....ம்
நல்ல புத்தி...!
 
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » தமிழகம் நிவாரண பொருட்களை மிரட்டி பறிக்கும் அதிமுகவினர் - ஜெ. படம் ஒட்டி அட்டூழியம்- கொதிக்கும் மக்கள்
Posted by: Mayura Akilan Published: Saturday, December 5, 2015, 12:28 [IST] Share this on your social network: Facebook Twitter Google+ Comments Mail

சென்னை: வெள்ளத்தில் சிக்கி சென்னை மக்கள்உயிரைவிட்டுக்கொண்டிருக்க பாகுபலி போஸ்டரை காப்பியடித்து போட்டு மலிவான விளம்பரம் தேடிய அதிமுகவினர்,  நிவாரண பொருட்கள் அனைத்திலும் அம்மா ஸ்டிக்கரை ஒட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மீட்புப்பணிகளில் ராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் இயங்கி வருகின்றனர். பால், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 
ADMK workers busy with sticking Amma stickers in Flood relief material
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மக்களை தவிக்க விட்டுள்ள தமிழக அரசு, நிவாரணப்பணிகளை மேற்கொள்வதிலும் சுணக்கம் காட்டியது பொதுமக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆங்காங்க போராட்டங்கள் வெடித்துள்ளன. அதிமுகவினரை அடித்து விரட்டி வருகின்றனர் மக்கள். 
நிவாரண பொருட்கள் பொதுமக்களும், தன்னார்வத் தொண்டர்களும் தங்களால் இயன்ற உதவிகளையும், உணவு பொருட்களையும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வழங்கி வருகின்றனர். 
இந்நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள், நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வத் தொண்டர்களிடம் இருந்து உணவு பொருட்களை வாங்கி, நாங்கள்தான் விநியோகிப்போம் என்று பல பகுதிகளில் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ADMK workers busy with sticking Amma stickers in Flood relief materials ஜெயலலிதா படம் இதற்காக பல ஆயிரக்கணக்கான ஸ்டிக்கர்களை தயார் செய்து வைத்துள்ளனர்.
அதிமுகவினர். தன்னார்வ நிறுவனங்களிடம் இருந்து 'பிடுங்கப்படும் உணவு' பொருட்களில் முதல்வரின் படம் போட்ட 'ஸ்டிக்கர்களை உணவு பொட்டலங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீது ஒட்டி வழங்குதாகவும் செய்திகள் வெளி வருகின்றன.
ADMK workers busy with sticking Amma stickers in Flood relief materials  
லாரிகளை நிறுத்தும் அதிமுகவினர் வெளியூரில் இருந்து நிவாரணம் ஏற்றி வரும் வாகனங்களை அ.தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி நிவாரணப் பொருட்கள் மீது, ஆளும் கட்சி சின்னத்தை பதிப்பதும் பின்னர், அவர்களே எடுத்துச் சென்று நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்ய எடுத்து செல்வதாகவும், பலர் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறார்கள். 
ADMK workers busy with sticking Amma stickers in Flood relief materials 
மிரட்டல் விடும் அதிமுகவினர் இதேபோல் ஒரு தனியார் நிறுவனத்தினரால் எடுத்து வரப்பட்ட 5 லாரிகளை இவ்வாறு தடுத்த காரணத்தினால் அந்த வாகனங்கள் சேலத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன.இதேபோல இஸ்லாமிய இயக்கத்தினரின் வாகனத்திலும் அ.தி.மு.க.வின் கொடியும், ஜெயலலிதாவின் படமும் வலுக்கட்டாயமாக ஒட்டப்பட்டிருக்கிறது. தாமதமாகும் நிவாரணம் இன்னும் சில இடங்களில் 'ஸ்டிக்கர்களை' தயார் செய்ய தாமதமானதால், அந்த உணவு பொருட்களை வழங்காமல் வைத்திருந்து ஸ்டிக்கர்கள் கிடைக்கப்பெற்ற பின் அதனை நிவாரண பொருட்கள் மீது ஒட்டி அரசு சார்பில் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறாமல், மக்கள் திண்டாடி வருகின்றனர். மே 17 இயக்கம் இதற்கிடையே நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் மே 17 இயக்கத்தை சேர்ந்த தொண்டர்களை அ.தி.மு.க.வினர் தொடர்ந்து மிரட்டிவருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நிவாரணம் வழங்குவதில் அ.தி.மு.க.வினர் செய்து வரும் அராஜகத்தினை மே 17 இயக்கம் வன்மையாக கண்டித்துள்ளது, இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''அ.தி.மு.க.வினரின் அராஜகத்தினை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் கொதிப்பு மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பொருட்களை, அதிலும் அடுத்தவர்கள் கொடுக்கும் பொருட்களை பெற்று வழங்கி, இதிலும் மலிவான அரசியல் ஆதாயம் தேடும் ஆளும் கட்சியினரை பார்த்து பல இடங்களில் மக்கள் கோபத்தில் குமுற ஆரம்பித்துள்ளனர். அதிமுகவின் பிஸியோ பிஸி நிவாரண பொருட்களை வழங்கா விட்டாலும், தன்னார்வ நிறுவனங்களை தடுத்து நிறுத்தி அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவதில் அதிமுகவினர் பிஸியாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுகவினர் செய்யும் இந்த செயலினால், ஆளும் அதிமுக அரசுக்கு வரும் தேர்தலில் கடும் பின்னடைவு ஏற்படும் என்று தெரிகிறது. ஊடகங்கள் விளாசல் 'Amma' stickers on relief material enrage hungry survivors in Chennai huff.to/1NwPgCW pic.twitter.com/3MZw இதனிடையே நிவாரணப் பொருட்களை பறித்து ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டி விநியோகம் செய்யப்படுவதை பல ஊடங்கள் விமர்சனம் செய்துள்ளன. உலகப் புகழ் பெற்ற ஹவ்விங்டன் போஸ்ட் வரை ஜெயலலிதாவின் போஸ்டர் அராஜகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » தமிழகம் வெள்ள நிவாரணப்பொருட்களில் முதல்வர் ஸ்டிக்கரை ஒட்டினால் கடும் நடவடிக்கை: போலீஸ் எச்சரிக்கை

Posted by: Mayura Akilan Updated: Saturday, December 5, 2015, 18:18 [IST] Share this on your social network: Facebook Twitter Google+ Comments Mail சென்னை: வெள்ளம் பாதித்த பகுதிகளிளுக்கு கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களை பறித்து முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. AIADMK vows to take action against partymen harassing volunteers சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தன்னார்வலர்கள் கொண்டு வரும் நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் பெற்றுக்கொண்டு, அதில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர்களை ஒட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டது. புகைப்படங்களுடன் இது தொடர்பான செய்தி வெளியானது. சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதிமுக தலைமை எச்சரிக்கை இதனையடுத்து, நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கலாம் என அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது. மேலும், அதிமுகவினர் இடையூறு செய்யும் ஆடியோ, வீடியோ பதிவு இருந்தால் அவற்றையும் கட்சி மேலிடத்துக்கு அனுப்பலாம் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். AIADMK vows to take action against partymen harassing volunteers தொலைபேசியில் புகார் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கலாம். 044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மின்னஞ்சலில் புகார் இதுதவிர info@aiadmk.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம். அல்லது @aiadmkofficial என்ற ட்விட்டர் பக்கத்தின் வாயிலாகவும் புகார்களை தெரிவிக்கலாம்" என்றும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறை எச்சரிக்கை இதேபோல வெள்ளம் பாதித்த பகுதிகளிளுக்கு கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களை பறித்து முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அமுதா ஐ.ஏ.எஸ் நிவாரணப்பொருட்களை தடுத்து நிறுத்துபவர்கள் பற்றி நேரடியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவிற்கு 9551555501 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப்பொருட்கள் மீது முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டச்சொல்வதாக எழுந்த புகாரை அடுத்து காவல்துறையினர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.



ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » தமிழகம் "கருத்து கந்தசாமி" "குழப்பப் பிடியில் சிக்கி பிதற்றுகிறார்" நடிகர் கமல்..: ஓ.பி.எஸ். கடும் கண்டனம் Posted by: Mathi Updated: Saturday, December 5, 2015, 19:20 [IST] Share this on your social network: Facebook Twitter Google+ Comments MailOPS condemns Actor Kamal சென்னை: வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு செயலிழந்துவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளதற்கு நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையை புரட்ட பெருவெள்ளம் குறித்து பேட்டியளித்திருந்த கமல்ஹாசன் தமிழக அரசை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்து ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கை: OPS condemns Actor Kamal கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கன மழை வெள்ளத்தால் தத்தளித்து தவிக்கின்ற சென்னை மாநகரம் மற்றும் ஏனைய மாவட்ட மக்களைக் காப்பாற்றி, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு எனும் முப்பரிமாணத்தில், போர்க்கால நடவடிக்கை என்பதற்கும் மேலான அவசர கால அடிப்படையில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா" அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். இந்த அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஆறுதலாகவும், கடமையே கண்ணாகக் கொண்டு செயல்படும் "மாண்புமிகு அம்மா" அவர்களது அரசுக்கு ஆதரவாகவும், உறுதுணையாக இருக்க வேண்டியதை விடுத்து, உள்ளிருந்து கொல்லும் நோய்போல, நடிகர் திரு.கமலஹாசன், தன்னிலையும், முன்னிலையும் மறந்து, அரசு நிர்வாகம் செயல் இழந்துவிட்டதாகவும், நிவாரண நிதிக்கு அரசு அவரிடம் பணம் கேட்டது போன்றும், நிவாரணப் பணிகளைச் செய்யத்தானே அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றும், மக்களின் வரிப்பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லை என்றும், தனது தகுதி மீறிய, தடுமாற்றமான, தவறான கருத்துக்களை இணையதளம் ஒன்றுக்கு பேட்டியாக அளித்துள்ளதாக 4-12-2015 அன்று ஓரிரு நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது. எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமலஹாசன், இந்த விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் தொடங்கியதிலிருயது இன்றைய தினம் வரை, சென்னை மாநகர் மட்டுமின்றி, மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதன் பாதிப்பிலிருயது தமிழக மக்களைக் காப்பாற்ற, "மாண்புமிகு அம்மா" அவர்கள் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகவும், "மாண்புமிகு அம்மா" அவர்களின் ஆணைப்படி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் துரித நடவடிக்கைகளின் காரணமாகவும், மழை வெள்ளப் பாதிப்புகளிலிருயது தமிழக மக்களின் உயிர்ச்சேதம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு, இயல்பான நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். இந்தச் சூழ்நிலையில் இப்படி தரமற்ற முறையில் பேட்டி அளிப்பதற்கு 1918 ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுபோன்ற கனமழை பெய்யவில்லை என்பதையும், ஒரே நாளில் 40 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்து, இந்தப் பருவம் முழுவதும் பெய்யும் மழையைவிட பல மடங்கு கூடுதலான மழை, ஒரு சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்தது என்பதையும் திரு.கமலஹாசன் தெரிந்து கொள்ளாமலேயே, தனது விதண்டாவாதக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். கமலஹாசன் எடுக்கின்ற திரைப்படத்தில் வேண்டுமானால், எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் என்றாலும், அதை ஒரே காட்சியில் சீர்படுத்தி விடுவதாகவும், ஒரே பாடலில் அதை சரிப்படுத்தி விடுவதாகவும் காட்டிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு. எதிர்பாராத வகையில் இயற்கை நம்மைத் தாக்கும்போது, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு என படிப்படியாக நிவாரண நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமாகத்தான் மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். அதைத்தான் "மாண்புமிகு அம்மா" அவர்கள் தற்போது சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். இயற்கை பேரிடர் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவரது 'அன்பே சிவம்' திரைப்படத்தை, அவர் மீண்டும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த நவம்பர் திங்களில், சென்னை மற்றும் பிற மாவட்டங்களில், பெருமழை பெய்து பாதிப்பினை ஏற்படுத்திய நேரத்தில், "மாண்புமிகு முதலமைச்சர் அம்மா" அவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு நேரடியாகச் சென்று, நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், என்னையும் அமைச்சர்கள் அனைவரையும், அரசின் உயர் அதிகாரிகளையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளச் செய்தார்கள். இவ்வாறு சென்னை மற்றும் பிற மாவட்ட மக்களை மீட்டு, இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், இம்மாத துவக்கத்தில் மீண்டும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கடுமையாகத் தாக்கி ஏற்படுத்தியுள்ள வரலாறு காணாத பாதிப்புகளைச் சீர்படுத்தி, மக்களை மீட்டு, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. "மாண்புமிகு முதலமைச்சர் அம்மா" அவர்கள், 3.12.2015 அன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை மேலும் முடுக்கிவிட்டார்கள். மேலும் "மாண்புமிகு அம்மா" அவர்களது ஆணைப்படி, அனைத்து அமைச்சர்களும், அரசின் உயர் அதிகாரிகளும் வெள்ள பாதிப்பு இடங்களுக்கு நேரடியாகச் சென்று நிவாரண நடவடிக்கைகள் சரியானபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், வரலாறு காணாத வகையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளிலிருயது மக்களை மீட்டு, உரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, நிவாரண நடவடிக்கைகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களும், ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்ட படகுகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளிலிருயது இதுவரை 11.53 இலட்சம் மக்கள் மீட்கப்பட்டு, 5009 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தேவையான உணவு, தங்கும் வசதி, மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. மேலும் "மாண்புமிகு முதலமைச்சர் அம்மா" அவர்களது அரசின் மூலம் இதுவரை 56.46 இலட்சம் உணவுப் பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 23,108 மருத்துவ முகாம்கள் நடத்தப் பெற்றுள்ளன. இத்தகைய போர்க்கால நடவடிக்கைகள் "மாண்புமிகு அம்மா" அவர்களது அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சமயத்தில், அரசு நிர்வாகம் செயலற்று போனதாக திரு. கமலஹாசன் அவர்கள் தெரிவித்திருப்பது என்பது உண்மைக்கு முற்றிலும் மாறானது மட்டுமல்ல, இது தமிழக மக்களையே அவமதிக்கும் செயல் ஆகும். இந்த இயற்கைச் சீற்றத்தினை வெற்றிகொள்ளும் வகையில் "மாண்புமிகு அம்மா" அவர்களது அரசு, போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறித்து அவர் தெரிந்தும், தெரியாததுபோல் நடித்துள்ளார். அதனால்தான் மக்களின் வரிப் பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கனமழை பெய்த பாதிப்பில் மக்கள் கடுமையாக அவதியுறும் நேரத்தில், அவர்களுக்கு உதவ மனமில்லாமல், எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று அரசியல் சுயநலத்துடன் செயல்படும் சமுதாயப் புல்லுருவிகளின் கைப்பாவையாக கமலஹாசன் மாறிவிட்டார் என்பதையே அவரது வாய்மொழி வெளிக்காட்டுகிறது. மக்களிடமிருயது பெறப்பட்ட வரிப் பணம் தமிழக அரசால் தவறாக கையாளப்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தினை உருவாக்கி, அரசுக்கு மக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் அரசியல் சுயலாபம் பெற வேண்டும் என்று முனையும் தீயசக்திக்கு கமலஹாசன் விலைபோய்விட்டாரா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். மக்களின் வரிப் பணம் என்ன ஆனது என்று கமலஹாசன் தெரியதுகொள்ள வேண்டும் என்றால் "மாண்புமிகு அம்மா" அவர்களது அரசின் கடந்த நான்கு ஆண்டுகளின் வரவு செலவுத் திட்ட அறிக்கைகளை தனது படப்பிடிப்புகளுக்கிடையே சற்று நேரம் ஒதுக்கி, அவர் படித்துப் பார்த்திருக்க வேண்டும். கல்வி, மக்கள் நல்வாழ்வு, சாலை வசதி மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள், வேளாண்மை உட்பட பல்வேறு முக்கியமான துறைகளில் கணிசமான அளவிற்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், அத்தகைய திட்டங்களை பிற மாநிலங்களும் செயல்படுத்துவதற்கான முன்னுதாரணமான மாநிலமாக தமிழகத்தினை "மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா" அவர்கள் முன்னேற்றமடையச் செய்துள்ளார் என்பதை இந்தியத் திருநாடே உணர்ந்து பாராட்டிக் கொண்டிருப்பதை அவர் தெரியது கொள்ள வேண்டும். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், மக்களின் வரிப்பணத்தை வைத்துதான் சமூக நலப் பணிகளுக்கு 61,119 கோடி ரூபாயும், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 49,930 கோடி ரூபாயும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும், உணவு மானியம் போன்ற மானியத் திட்டங்களுக்கும் 12,897 கோடி ரூபாயும் செலவிட, 2015-16 வரவு செலவுத் திட்டத்தில் சட்டமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. மக்களின் வரிப் பணத்தை வைத்துத்தான் சாலை வசதிகள் உட்பட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இவ்வளவு ஏன்? 2015-16 ல் மாநில பேரிடர் நிவாரணத்திற்கு ஒதுக்கப்பட்ட 679 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம்தான், தற்போது செலவிடப்பட்டு வருகிறது. ஆகவே, வரிப்பணம் எங்கே போகிறது என்ற சந்தேகம் திரு. கமலஹாசன் அவர்களுக்கு எழவேண்டிய அவசியமே இல்லை. தமிழக மக்களின் வரிப் பணம் ஒரு ரூபாய் கூட வீணாகச் செலவழிக்கப்படக் கூடாது என்பது மட்டுமல்ல, அந்த ஒவ்வொரு ரூபாயும் பயனுள்ள வகையில் மக்கள் நலப் பணிகளுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருபவர் மாண்புமிகு அம்மா அவர்கள். கார்ப்பரேட் திட்டத்திற்கு 4000 கோடி ரூபாய் வரை செலவிட முடிவதாகவும், அந்த பணத்தை நாட்டில் உள்ள 120 கோடி மக்களுக்கும் ஏன் பிரித்துக் கொடுக்கக்கூடாது என்றும் கமலஹாசன் அறிவுஜீவி போன்று ஒரு வினா எழுப்பியுள்ளார். இந்த வினாவை அவர் மத்திய அரசைப் பார்த்து எழுப்பியுள்ளார் போலும்! அதை ஏன் இப்போது கேட்கிறார் என்று புரியவில்லை. மத்திய அரசின் மீது அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. ஒருவேளை, சினிமாத் துறையின் மீது மத்திய அரசு விதித்த சேவை வரி தள்ளுபடி செய்யப்படவில்லை என்கிற கோபமோ, என்னவோ! அந்தக் கோபத்தை தமிழ்நாட்டின் மீது காட்டி, தமிழக மக்களை குழப்ப வேண்டாம் என்று அவரை நான் கேட்டுக்கொள்கிறேன். கமலஹாசன் தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் கொட்டி எடுத்ததாகச் சொல்லும் ஒரு திரைப்படம் வெளியிடப்படுவதில் அடுக்கடுக்கான சிக்கல்களை அவர் சந்தித்த நேரத்தில் சுய லாபத்திற்காக, தமிழ்நாட்டை விட்டும், இயதியாவை விட்டும் வெளியேறி விடுவேன் என்று சொன்னவர்தான் கமலஹாசன். அப்போது, அந்தப் பிரச்சனையை தீர்த்துவைத்த "மாண்புமிகு முதலமைச்சர் அம்மா" அவர்களுக்கு நன்றி கூறியதை மறந்துவிட்டு, தற்போது அவர் பேட்டி அளித்திருக்கிறார். "மாண்புமிகு அம்மா" அவர்களது அரசு, வெள்ள நிவாரண நிதியை வழங்குமாறு தனியாருக்கு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. மத்திய அரசிடம்தான் நிவாரண உதவி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படும்போது, இரக்க குணம் படைத்தவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்கள், தாங்களே முன்வந்து "மாண்புமிகு முதலமைச்சர்" நிவாரண நிதிக்கு அவர்களாகவே நிதியுதவி செய்கிறார்கள். மக்கள் துயர் துடைக்கும் மாநில அரசின் நிவாரண நடவடிக்கைகளில் தங்களையும் இணைத்துக் கொள்வது புண்ணியமான செயலாகக் கருதி, அவர்கள் பொருள் உதவியும், செயல் உதவியும் செய்கிறார்கள். ஆனால் கடவுள் நம்பிக்கையற்ற கமலஹாசன் பாவ புண்ணியம் பற்றி கொண்டிருக்கும் கருத்தே வேறு அல்லவா? அதனால்தான் கேட்காத ஒன்றை கேட்டதாகச் சொல்லி, பேட்டி அளித்துள்ளார். இப்படி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாங்களாகவே முன்வயது வயது நிதி உதவி தருவதுடன், இத்தகைய பேரிடர் தருணங்களில் பல அமைப்புகள் நேரடியாகவும் சேவைப் பணிகளை மேற்கொள்கின்றன என்பதை கமலஹாசன் அறியமாட்டாரா? அந்த வகையில் தற்போதும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற அளவிற்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விளம்பரமும் இன்றி நேரடியாக சேவை செய்துவருகின்றன. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமெனில் தெலுங்கு முன்னணி நடிகர் திரு. அல்லு அர்ஜுன் அவர்கள், சென்னை வெள்ள நிவாரணத்திற்கு 25 இலட்ச ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்து, தனது டுவிட்டர் தளத்தில், இன்று தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது, தான் 18 வருடங்கள் வாழ்ந்த சென்னை என்றும், சென்னையை தான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார். தமிழனின் பண்பாடே, யாரிடமும் யாசிக்காமல் இருப்பதும், தானமாகக் கொடுப்பதை மறுதலிப்பதும்தான். "ஈ என இரத்தல் இழியதன்று, அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழியதன்று கொள் என கொடுத்தல் உயர்யதன்று, அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்யதன்று" என்பதுதான் தமிழர் பண்பாடு. அத்தகைய தமிழர் பண்பாட்டின் இலக்கணமாய் திகழும் "மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா" அவர்களின் அரசு, திரு.கமலஹாசன் அவர்களிடம் எவ்வித யாசகமும் கேட்கவில்லை. ஆனால், அரசு நிவாரண நிதி கேட்பதாகவும், தான் மக்களை நேசிப்பதால் உதவி வழங்குவதாகவும் தேவையற்ற கருத்துகளை அவர் தெரிவித்து இருப்பது மலிவான வகையில் விளம்பரம் தேடுவதற்கான முயற்சியே ஆகும். இந்த வகை விளம்பரத்திற்காகத்தான், கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு 12 இலட்ச ரூபாய் உதவி வழங்குவதாக அவர் தெரிவித்தாரா? உண்மையிலேயே அந்த உதவியை அவர் வழங்கினாரா? யாரிடம் வழங்கினார் என்பதை அவரால் தெரிவிக்க இயலுமா? இதேபோன்றுதான், அவர் சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்ததற்காக கிடைத்த பல கோடி ரூபாயை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியதாக செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம், அவ்வாறு எந்த உதவியையும் அவர் வழங்கவில்லை என மறுப்பு வெளியிட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். கமலஹாசன் பெரிய நடிகர் என்பதற்காகவோ, அவர் பெரிய, பெரிய படங்களை எடுக்கிறார் என்பதற்காகவோ, அவரது பிதற்றல் மொழிகளை கேட்டுக் கொண்டிருக்க முடியாது. "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா" அவர்களின் மீது முழு நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ள தமிழக மக்கள் அதனை நிச்சயமாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ, நம்பவோ மாட்டார்கள் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் சாடியுள்ளார்.

 நன்றி ஒன் இந்தியா இணையதளம்

இது பேசும் நேரமில்லை



இந்த இருள் சூழ்ந்த நிலையிலும் சில வெளிச்சக்கீற்றுகள் தென்படுகின்றன.
மற்றவர்க்கு உதவுவதற்கு நிறைய நல்லுள்ளங்கள் முன்வந்துள்ளன.. இதற்காக இயற்கைக்கு நன்றி..

அய்யா திரு. வா.மணிகண்டன் அவர்கள் தன் நிசப்தம் அறக்கட்டளை மூலம் சென்னை கடலூர் வெள்ள பாதிப்புக்கு உதவ நிதி கேட்ட அடுத்த சில மணி நேரங்களில் லட்சங்களில் குவியத்துவங்கிவிட்டது. எளிய சில உதவிகள் செய்ய நிணைத்து துவங்கிய பணிக்கு அவர்மேல் உள்ள அன்பினாலும் பணியின் அவசியத்தையும் கருதி வாரி வழங்கி வரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

அவரது நிசப்தம் அறக்கட்டளை மூலம் சப்தமின்றி செய்யப்படும் பல உதவிகள் பற்றி பிறகு விரிவாக பேசுவோம்.

தற்போது அவரது முயற்சி முழுமைபெற  தங்களால் இயன்ற தொகையை அனுப்ப அவரது அறக்கட்டளையின் முகவரியையும் தொடர்பு விவரங்களையும் தருகிறேன்.

(முக்கிய வேண்டுதல் மற்றும் பின்குறிப்பு) தங்களால் வழங்கப்படும் தொகைக்கு வருமான வரிவிலக்கு உண்டென்பதால் தரும் நிதியை தாராளமாக தரலாம்..



அலைபேசி எண்கள்:
Prabhu- +91 9731736363
Marimuthu - +91 8105775599

Vaa.Manikandan - + 91 9663303156

Ramachandran - +91 9483823898
Jayaprakash- +91 9886647409

மின்னஞ்சல் தொடர்புக்கு vaamanikandan@gmail.com

Account Number: 05520200007042
Account Holder Name: Nisaptham Trust
Account Type: Current
Bank : Bank Of Baroda
State : Tamil Nadu
District : Erode
Branch : Nambiyur
IFSC Code : BARB0NAMBIY (5th character is zero)
Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code)
City : Nambiyur





Tuesday, 17 November 2015

ஒரு 'முன் கதை சுருக்கம்'

முந்தைய அப்பாவி ஆறுமுகமும் அவனது கடவுள்களும்... 

எனும் பதிவு 

இந்த மழை சூழ்ந்த நிலையில் அதுவும் நம் அன்புக்குறிய மீசைக்காரர் கில்லர்ஜி பற்ற வைத்த கடவுளை கண்டேன். எனும் (பட்டாசு) தொடர்பதிவின் தொடர்ச்சியோ!!!  எனும் ஐயம். சில அன்பர்களுக்கு ஏற்பட்டதை அறிந்தேன்.

அதன் விளைவே இவ்விளக்கத்துடன் கூடிய ஒரு சிறு
  'முன்கதை சுருக்கம்'

கடந்த பதிவில் ஆரம்பத்தில் ராஜ்குமார் எனும் ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போது அவனுக்கும் அவ
து அதிகாரிக்கும் நடந்த உரையாடலை பதிவிட்டிருந்தேன்..

அதற்கு முன் நடந்த சிலவற்றை தொடரினூடே சொல்ல நினைத்தேன். ஆனால் நம் அன்பு கில்லர்ஜி அவர்களின் முயற்சியால் சுறுசுறுப்பாகி உள்ள நம் பதிவுலக அன்பர்கள் குழம்ப வேண்டாமென்பதால் மிக மிக
சுருக்கமாக ஒரு முன்கதை சுருக்கம்...

நாட்டில் மிக பலமாக வேரூன்றி மூலைமுடுக்கெல்லம் கால் பதித்துள்ள ஒரு பெரும் நிறுவனத்தின் கிளையில்தான் ராஜ்குமார் பணிபுரிந்து வந்தா
ன். அவது அலுவலகம் மற்றும் சுற்று சூழல் காரணமாக அந்த நிறுவனத்தின் வேறு ஒரு கிளைக்கு மாறுதல் கேட்டு விண்ணப்பித்தான். அத்துடன் அதை மறந்துவிட்டு தன் அன்றாட அலுவலக பணிகளில் மூழ்கி விட்டிருந்தான்..

அந்த சூழலில்தான் அவ
னுக்கு விருப்ப மாறுதல் உத்தரவு வந்த தகவலை அவது அதிகாரி அவனுக்கு சொன்னார்..

முன் ஜாக்கிரதையுடன் ஓர் பின்குறிப்பு : இது அண்மையில் ஏற்பட்ட மழை , புயல், கில்லர்ஜியின் கடவுள், மற்றும் சில படிப்பினைகள் தந்த அனுபவங்களின் தொடர் அல்ல.. 


ஒருவனுக்கு  பாதிப்பு ஏற்படும்போது 

யாரெல்லாம் உடன் வருவார்கள்.,?

யாரெல்லாம் எட்டி நின்று பரிதாபப்படுவார்கள்.,?

யாரெல்லாம் பரிகசிப்பார்கள்.,? 

எனும் 

உண்மையை 

உணரச் செய்யும் ஒரு சிறு முயற்சியே.. இதில் என்னால் இயன்றவரை கலப்படமின்றி உண்மை சொல்ல முயல்கிறேன். 

இது கில்லர்ஜியின் பதிவின் தொடர்ச்சி அல்ல என்பது உண்மை. அதே நேரத்தில் தொடர்பற்றது என்றும் சொல்லி விட முடியாது. அவர் கனவில் வந்தது ஒரே கடவுள். ஆனால் நம் ஆறுமுகத்தை சந்தித்ததும், சோதித்ததும் பல கடவுள்கள்..

மற்ற விவரங்களுக்கு சற்று பொறுத்திருப்போமே...!



Sunday, 15 November 2015

அப்பாவி ஆறுமுகமும் அவனது கடவுள்களும்...

இதே போல் 2011 ல் ஒரு நவம்பர் மாதம் ஒரு சனிக்கிழமை காலையில்.....

ராஜ்குமார் சற்று சோம்பலான பேர்வழி.. அவனுக்கு அதிகாரியிடமிருந்து அலைபேசியில் ஓர் அவசர!!! அவச.. (மன்னிக்க) ரச...ரசமான காலை அழைப்பு..

நடந்த சம்பாஷனைகளை இங்கே பகிர்கிறேன்.

ராஜ்குமார் : அய்யா வணக்கம்..

அதிகாரி  :உன் வணக்கத்தை தூக்கி குப்பைல போடு.

ரா: என்ன அய்யா ஆச்சு ?

அ : என்ன ஆகலை?. உன் விருப்பப்படி உனக்கு விருப்ப மாறுதல் வந்திருக்கு. இப்ப உனக்கு சந்தோஷம்தானே?.

ரா: அய்யா என் குடும்ப சூழ்நிலை காரணமாக.., விண்ணப்பம் கொடுத்தேன்., என்ன ஆச்சுங்கய்யா?

அ:அதெல்லாம் எனக்கு தெரியாது. உத்தரவு வந்திருக்கு அதோட உனக்கு பதிலாய் இன்னொரு ஆளையும் போட்டாச்சு. நானென்ன பன்னுறது.

ரா: அய்யா என் குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான் நான் மனு செய்தேன். இப்போது நான் என்ன செய்ய வேணும் சொல்லுங்க...

அ:நீ ஒன்னும் செய்ய வேண்டாம். உன்னை நம்பி வந்தேன் பாரு?!,?!,!!! அதுக்கு இது வேண்டியதுதான்.

ரா: இல்லை அய்யா நீங்க சொன்னால் என் விருப்ப மாறுதல் விண்னப்பத்தை ரத்து செய்ய விண்ணப்பம் செய்கிறேன்.

அ: அதெல்லாம் முடியாது. உனக்கு பதில் போட்ட ஆள். நாளை மறுநாள் வருவார். அவர் வந்தால் உன்னை வேலையில் இருந்து விடுவிப்பதை தவிர எனக்கு வேறு வழியில்லை.....

மற்றவை பிறகு...

(குறிப்பு) இதில் எங்கே அந்த அப்பாவி ஆறுமுகமும் அவனது கடவுள்களும் என்று கேட்கிறீர்களா?

விரைவில் வருவான் தொடருங்கள்..

தவறு செய்து விட்டு தப்பிக்க முயலும் பலரைப்போல் அல்லாமல்..

தன் பணியை ஒரு வேள்விபோல் செய்த அவன் வாழ்வை விளக்கவும் நம் அறியா மெய்யை விலக்கவும் தானிந்த முயற்சி...

Saturday, 7 November 2015

இதோ என் பதில்



எனக்கு யாரையும் காயப்படுத்தி பழக்கமில்லை. கா'ரணம்' காயம் தானாக ஆறும்.. ஆனால் 'ரணம்'.. நான் சொல்ல வருவது உடலுக்கு ஏற்படுத்தப்படும் காயம் அல்ல எவர் மனதையும் காயப்படுத்தக்கூடாது. என்பதை ஒரு கொள்கையாகவே கொண்டிருப்பவன் நான் அதற்காக எல்லா நேரங்களிலும் என்னால் அமைதியாக இருக்க முடியுமென்று சொல்ல நானொன்றும் புத்தனோ. அல்லது சித்தனோ இல்லை அவர் மொழியில் சாதா'ரண' பித்தன்.

விளையாட்டாய் நானிட்ட ஒரு பின்னூட்டம் (நான் மிகவும் மதித்த)  ஒருவரை காயப்படுத்துமென்றால்.. அவர் அதற்கிட்ட மறுமொழி? அதையும்தானே அவர் வெளியிட்டிருக்க வேண்டும்.

சரி போகட்டும் அதற்க்கு முன் அவர் வெளிப்படுத்திய ! பதிவர் சங்கம் தேவையா? என்ற பொருள் நிறைந்த பதிவில் என்னைப்போல் அல்ல என்னை வைத்து குளிர்காய நினைத்த ஒரு மஹாத்மாவின் கருத்துரையை வெளியிட்டிருந்தார். ஆனால் அதைக்கண்டு அதே பதிவில் அந்த கருத்து குறித்து நான் தெரிவித்திருந்த கருத்துரையை ஏனோ வெளியிடவில்லை. சரி அவர்தளம் அவர் விருப்பம் என்று விட்டுவிட்டேன். அதற்கு முன்னதாகவே ஒரு மாபெரும் மனிதர் குறித்து அவர் வெளியிட்டிருந்த ஒரு விடயம் அவர்மேல் நான் கொண்டிருந்த பிம்பம் சரியத்துவங்கிவிட்டது தனி சோகம். ஆனாலும் அவர்மேல் கொண்ட அன்பை நான் இதுவரை திரும்பப் பெறவில்லை இனியும்....

அவருக்கு புரியும் மொழியில் சொல்ல யோசிக்கும்போதுதான் ஒரு கதையை கண்டேன். மன வலியுடன் சிந்திப்பதைவிட வேரொரு பதிவரின் கதையை வெளியிடுவதென்பது அந்த நேரத்தில் எனக்கொன்றும் தவறாகப்படவில்லை.

இதோ அந்த கதை

Friday, 23 October 2015

சத்தியமா இது என் கதை இல்லீங்கோவ்!!!!!

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...

கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்...

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ..


நன்றி..

 http://www.yarl.com/forum3/topic/119868-படித்ததில்-பிடித்த-குட்டி-கதைகள்/

1 comment:

சிறப்பான குட்டிக் கதை . பாடம் சொல்லும் கதை


தன் இணைப்பு வேலை செய்யவில்லை என்றால் உலகமே இருண்டு விட்டது என்று சொல்ல நானொன்று அதிகம் படித்தவனில்லை.

கா'ரணம்' நான் பாமரன்

அந்த நேரத்தை வேறு உபயோகமான வேலை செய்ய ஆண்டவன் என்னை பணித்ததாக எண்ணி  வேறு வேலை என்ன இருக்கிறதோ அதை பார்பவன். எதுவும் இல்லாவிட்டால் ஆடு மாடு மேய்ப்பதையும் சந்தோஷமாக செய்ய முற்படுபவன்.. எனக்கு வேறு என்ன தெரியும்.

கா'ரணம்' நான் பாமரன்.  

ஆனால் மற்ற தளங்களுக்கு சென்று பிண்ணூட்டம் மட்டும் இடத்தெரிந்த மேதை அல்ல..

கா'ரணம்' நான் பாமரன்.


Tuesday, 27 October 2015

பதிவரானதால் 'கண்ட' பலன்


போன  வாரம்

ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது... அவரைப்பற்றி பிறகு விரிவான பதிவு.. வேரொரு  நீண்ண்ண்.....ட பதிவு ... பதிவர் ------------ மூலமாக வரும்...

இப்போது சம்மந்தப்பட்டவரைப்பற்றி சில ரகசிய தகவல்களைப் பற்றி மட்டுமே தரப்போகிறேன்!!!.

1) பொதுவாக ஒரு வீட்டில் கணவர், குழந்தைகள் ஆகியோர் சாப்பிட்டார்களா என்பதைப் பற்றி கவலையே! படாமல் வீட்டில் நுழைந்ததும் தான்பாட்டிற்க்கு சாப்பிடும் ஒரு பெண்மணியை யாரேனும் கேள்விப்பட்டதுண்டா...

2) பெற்ற பிள்ளையிடமே பேராசைக்காரர் என்று பட்டம் பெற்ற தாயை கண்டதுண்டா?

3) ஒவ்வொரு பைசாவிற்க்கும் கணக்கு பார்க்கும் விவரமான அம்மாவை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் என்ன சொல்வீர்கள்?.

4) கணவர் மறைந்தநிலையில் அழக்கூட நேரமில்லாதவரை அறிந்ததுண்டா?..

அப்படிப்பட்ட ஒருவரை சந்தித்தேன்..

அதுவே நான் பதிவரானதால் 'கண்ட' பலன்.

Saturday, 24 October 2015

ஸ் அப்பா... அவந்தானாய்யா... இவன்



 


அண்ணன் வடிவேலு : காலங்காத்தால பேப்பர் படிக்கலைன்னா கண்ணு அவிஞ்சுடும் சீக்கிரமா தந்தி ஒன்னு குடுய்யா..

வில்லங்க பார்த்தீபன் : என்னது காலங்காத்தாலையா? ஊருல இருக்குரவங்களுக்கெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு காலைலதான் வருது. ஆனா உனக்கு மட்டும் எப்படி ரெண்டு காலைல சே.. காலங்.அதெப்படி சொன்ன இன்னொரு தடவ சொல்லு பாக்கலாம்.

அ வ : எப்பா அது அப்படியில்ல காலங்காத்தால எங்க சொல்லு பாக்கலாம்...

வி பா : அதாண்டா நானும் கேக்குறேன் காலங்காத்தாலன்னா என்னது? எப்படி?

அ வ : அப்படிக்கேளு காலைல கோழி கூவுதில்ல..

வி பா : இல்ல

அ வ : அதில்லப்பா

வி பா : அதாண்டா நானும் சொல்றேன். கோழி என்னைக்கு கூவி இருக்கு?

அ வ : என்னப்பா நீ ஏட்டிக்கு போட்டியாவே பேசினா மனுசன் எப்படித்தான் பேசுறது..

வி பா : என்னது ஏட்டிக்கு போட்டியா? சரி ஏட்டின்னா என்ன போட்டின்னா என்ன ?

அ வ : எப்பா எனக்கு வயத்தால வருதுப்பா.. கொஞ்சம் இரு இதோ வாரேன்..

வி பா : டேய் நில்லுடா?

அ வ : என்னப்பா மனுசனோட அவசரம் தெரியாம ?

வி பா : எல்லாருக்கும் வாயால வரும் அது வாந்தி. அதென்ன உனக்கு மட்டும் வயத்தால வருதுன்ற அது எப்படி வருது பாக்கலாம் கொஞ்சம் நில்லு..

அ வ : கொஞ்சம் இருப்பா சொல்றேன்..

வி பா : டேய் உனக்கு வருதுன்னா என்ன இருன்னு சொல்றியே உனக்கு அறிவிருக்கா?

அ வ : யப்பா முடியலப்பா இன்னொரு நாளைக்கு சாவகாசமா வாரேன். உன் ஆச தீர தூக்கிப்போட்டு மிதி நான் வாயத்தொரந்தேன்னா.. ஏண்டா நாயேன்னு கேளு

வி பா : அப்ப நீ மனுசன் இல்லன்றது இப்பதான் தெரியுதா...?

அ வ : (மனசுக்குள் ஆகா விட்டா இவன் நம்மள நாரடிச்சுத்தான் விடுவான் போல ) என்று புலம்பிக்கொண்டே ஓடுகிறார்..

வி பா : போடா போ இதே கேள்வியோட இன்னொரு நாளைக்கு வருவேல்ல அப்ப வேற மாதிரி மடக்கி உன்ன வாயால போக வக்கிறேன் பாரு..

மனசு...! சுத்தமே.. சொல்லலாமே சத்தமா...

மனசு...! சுத்தமாக
இருக்கு
மத்ததெல்லாம்...? இப்ப
எதுக்கு

குறைகள் நிலவிலும்
இருக்கு
அதனால் அதன் அழகில் இல்லை
இழுக்கு.

கூடி இழுத்த தேரில்
குற்றம் சொல்வது சுலபம்
அதனால் நம்மில் இங்கு
யாருக்கு லாபம்.

அறைக்குள் இருந்து
கொண்டே அடுக்கிடலாம் குறைகளை
கற்றுத் தெரிந்தால்தான்
நீக்கிட முடியும் கறைகளை.

யாரிட  மில்லை குறை
இங்கே யாரிடமு ள்ளது நிறை
சொல்வதில் தேவை இங்கிதம்
அதுதான் நம் தேவை இங்கு நிதம்.

அறியாமல் நடந்த பிழைகளை
சுட்டுவது தவறு அல்ல..
அதற்க்காக சேர்ந்து
கொட்டுவது நியாயமே அல்ல.






Friday, 23 October 2015

சத்தியமா இது என் கதை இல்லீங்கோவ்!!!!!

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...

கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்...

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ..


நன்றி..

 http://www.yarl.com/forum3/topic/119868-படித்ததில்-பிடித்த-குட்டி-கதைகள்/