Thursday, 29 January 2015

தலைப்பில் 1ம் இல்லை

ஒரு வழியாக
ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த
ஒரு இலக்கிய?சிந்தனை நிரம்பிய ஆராய்ச்சி கட்டுரை (அ) பதிவு பற்றி தமிழ் பதிவுலகில் உள்ள
நண்டு சிண்டு முதல் பல பெருந்தலைகள் வரை அனைவரும்
சுவைத்து, துவைத்து,
அலசி, பிழிந்து, கசக்கி, கிழித்து, காய வைத்து, தொங்க விட்ட பிறகும் நான் அது பற்றி பேசாமல் இருந்தால்
விக்ரமாதித்யனின் வேதாளம் சொல்வதுபோல
என் 1 தலை சுக்கு 100 ஆகி விடுமோ என்ற அச்சம் காரணமாகவும், பதிவுலகில்
(இது வரையும் பெரிதாக எந்த ஆணியும்  பிடுங்காத )
நான் இது பற்றி கருத்து பதியா விட்டால் பிற்காலத்தில் என் தலைமுறை பலரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வருமே என்பதுடன்
கருத்து சுதந்திரம் பற்றி
க கூ மு கூ  மு
என்ற அவப்பெயரை  சுமக்க வேண்டி வருமே
என்கிற கவலையுடன்  இதையெல்லாம் அனுமதிக்கவே கூடாது என்ற சமூக அக்கறையுடனும் சிந்தித்ததன் விளைவே எனது முந்தைய பதிவு?!
 அல்ல அல்ல
பதிவின் தலைப்பு 

அது பற்றி
"குறைந்தபட்ச நேர்மை' உள்ள வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பதிய வேண்டும் என்ற நிலையில் திடீரென
என்
மதிப்பிற்குறிய
ஒரு
பதிவரின்
திடீர் (தலை) மறைப்பு
செய்'தீ' கேட்டு கெட்ட கோபம் கொண்டுள்ளேன்.
இதுதான் பதிவுலகம் என்றால்
எனக்கு இந்த
(பதிவு) உலகம் வேண்டாம்.
என்றும்  சொல்ல முடியும்
ஆனால்
அவர் விலக சொல்லும் காரணம்  சரி இல்லை.
அனுபவமும் வயதும் தராத
பாடமா அவருக்கு மற்றவர் சொல்லி தர உள்ளது.
  


5 comments:

  1. ///இதுதான் பதிவுலகம் என்றால்
    எனக்கு இந்த
    (பதிவு) உலகம் வேண்டாம்.
    என்று என்னாலும் சொல்ல முடியும்
    ஆனால்
    அவர் போன்று விலகி செல்லும் நோக்கில் இல்லை.
    அனுபவமும் வயதும் தராத
    பாடமா அவருக்கு மற்றவர் சொல்லி தர உள்ளது.///
    புரியவில்லை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நல்ல பல தகவல்கள் அடங்கிய பதிவுகள் கந்த இல்லை தந்த
      அந்த கோவைக்கார பதிவர் மன'தை'
      யாரோ சிலர் காயப்படுத்தியதன் விளைவாக
      கோவைக்காரர் கோபக்காரராகி
      தன் தளத்தை சுற்றி சுற்று சுவர் ஒன்றை எழுப்பியுள்ளது தாங்கள் அறியாததா?
      வருகைக்கு நன்றி அய்யா.

      Delete
  2. புரிகிறது..

    வரவழைத்து விடுவோம்...!

    ReplyDelete
  3. இது போல பல தடவை நடந்துள்ளன...!!!

    ReplyDelete
  4. யாரப்பா அது?! ம்ஹும்! புரியவில்லை...

    ReplyDelete