Tuesday, 27 October 2015

பதிவரானதால் 'கண்ட' பலன்


போன  வாரம்

ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது... அவரைப்பற்றி பிறகு விரிவான பதிவு.. வேரொரு  நீண்ண்ண்.....ட பதிவு ... பதிவர் ------------ மூலமாக வரும்...

இப்போது சம்மந்தப்பட்டவரைப்பற்றி சில ரகசிய தகவல்களைப் பற்றி மட்டுமே தரப்போகிறேன்!!!.

1) பொதுவாக ஒரு வீட்டில் கணவர், குழந்தைகள் ஆகியோர் சாப்பிட்டார்களா என்பதைப் பற்றி கவலையே! படாமல் வீட்டில் நுழைந்ததும் தான்பாட்டிற்க்கு சாப்பிடும் ஒரு பெண்மணியை யாரேனும் கேள்விப்பட்டதுண்டா...

2) பெற்ற பிள்ளையிடமே பேராசைக்காரர் என்று பட்டம் பெற்ற தாயை கண்டதுண்டா?

3) ஒவ்வொரு பைசாவிற்க்கும் கணக்கு பார்க்கும் விவரமான அம்மாவை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் என்ன சொல்வீர்கள்?.

4) கணவர் மறைந்தநிலையில் அழக்கூட நேரமில்லாதவரை அறிந்ததுண்டா?..

அப்படிப்பட்ட ஒருவரை சந்தித்தேன்..

அதுவே நான் பதிவரானதால் 'கண்ட' பலன்.

Saturday, 24 October 2015

ஸ் அப்பா... அவந்தானாய்யா... இவன் 


அண்ணன் வடிவேலு : காலங்காத்தால பேப்பர் படிக்கலைன்னா கண்ணு அவிஞ்சுடும் சீக்கிரமா தந்தி ஒன்னு குடுய்யா..

வில்லங்க பார்த்தீபன் : என்னது காலங்காத்தாலையா? ஊருல இருக்குரவங்களுக்கெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு காலைலதான் வருது. ஆனா உனக்கு மட்டும் எப்படி ரெண்டு காலைல சே.. காலங்.அதெப்படி சொன்ன இன்னொரு தடவ சொல்லு பாக்கலாம்.

அ வ : எப்பா அது அப்படியில்ல காலங்காத்தால எங்க சொல்லு பாக்கலாம்...

வி பா : அதாண்டா நானும் கேக்குறேன் காலங்காத்தாலன்னா என்னது? எப்படி?

அ வ : அப்படிக்கேளு காலைல கோழி கூவுதில்ல..

வி பா : இல்ல

அ வ : அதில்லப்பா

வி பா : அதாண்டா நானும் சொல்றேன். கோழி என்னைக்கு கூவி இருக்கு?

அ வ : என்னப்பா நீ ஏட்டிக்கு போட்டியாவே பேசினா மனுசன் எப்படித்தான் பேசுறது..

வி பா : என்னது ஏட்டிக்கு போட்டியா? சரி ஏட்டின்னா என்ன போட்டின்னா என்ன ?

அ வ : எப்பா எனக்கு வயத்தால வருதுப்பா.. கொஞ்சம் இரு இதோ வாரேன்..

வி பா : டேய் நில்லுடா?

அ வ : என்னப்பா மனுசனோட அவசரம் தெரியாம ?

வி பா : எல்லாருக்கும் வாயால வரும் அது வாந்தி. அதென்ன உனக்கு மட்டும் வயத்தால வருதுன்ற அது எப்படி வருது பாக்கலாம் கொஞ்சம் நில்லு..

அ வ : கொஞ்சம் இருப்பா சொல்றேன்..

வி பா : டேய் உனக்கு வருதுன்னா என்ன இருன்னு சொல்றியே உனக்கு அறிவிருக்கா?

அ வ : யப்பா முடியலப்பா இன்னொரு நாளைக்கு சாவகாசமா வாரேன். உன் ஆச தீர தூக்கிப்போட்டு மிதி நான் வாயத்தொரந்தேன்னா.. ஏண்டா நாயேன்னு கேளு

வி பா : அப்ப நீ மனுசன் இல்லன்றது இப்பதான் தெரியுதா...?

அ வ : (மனசுக்குள் ஆகா விட்டா இவன் நம்மள நாரடிச்சுத்தான் விடுவான் போல ) என்று புலம்பிக்கொண்டே ஓடுகிறார்..

வி பா : போடா போ இதே கேள்வியோட இன்னொரு நாளைக்கு வருவேல்ல அப்ப வேற மாதிரி மடக்கி உன்ன வாயால போக வக்கிறேன் பாரு..

மனசு...! சுத்தமே.. சொல்லலாமே சத்தமா...

மனசு...! சுத்தமாக
இருக்கு
மத்ததெல்லாம்...? இப்ப
எதுக்கு

குறைகள் நிலவிலும்
இருக்கு
அதனால் அதன் அழகில் இல்லை
இழுக்கு.

கூடி இழுத்த தேரில்
குற்றம் சொல்வது சுலபம்
அதனால் நம்மில் இங்கு
யாருக்கு லாபம்.

அறைக்குள் இருந்து
கொண்டே அடுக்கிடலாம் குறைகளை
கற்றுத் தெரிந்தால்தான்
நீக்கிட முடியும் கறைகளை.

யாரிட  மில்லை குறை
இங்கே யாரிடமு ள்ளது நிறை
சொல்வதில் தேவை இங்கிதம்
அதுதான் நம் தேவை இங்கு நிதம்.

அறியாமல் நடந்த பிழைகளை
சுட்டுவது தவறு அல்ல..
அதற்க்காக சேர்ந்து
கொட்டுவது நியாயமே அல்ல.


Friday, 23 October 2015

சத்தியமா இது என் கதை இல்லீங்கோவ்!!!!!

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...

கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்...

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ..


நன்றி..

 http://www.yarl.com/forum3/topic/119868-படித்ததில்-பிடித்த-குட்டி-கதைகள்/

Wednesday, 21 October 2015

இந்த சிகாமணியை அறிவீர்களா?
பல பதிவர்களின் தளங்களுக்கு சென்று தம் கருத்தை பதிவு செய்துள்ள ந்த சிகாமணியை யாராவது அறிவீர்களா? தெரிந்தால் சொல்லுங்களேன்... நேரில் போய் ஒரு வணக்கம் வைக்கலாம்...

<<<>>
இது மாதிரி கூவி கூவித்தான் நம்மளை ஒழித்தார்கள். அது சரி புலி என் புறப்பட்டு வான்ன என்ன அர்த்தம் அய்யா! சரி! புலி எப்படி புறப்படும் என்று யாரும் பள்ளியில் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை...கூடவே கொஞ்சம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

புலியென புறப்பட்டு வா! சிங்கமென சீறி வா
.
பசு போல அசைந்து வா!
பாம்பென படமெடுத்து வா!
குரங்கு போல் சொரிந்து வா!
குதிரை மாதிரி கனைத்து வா!
யானை போல பிளிறிகிட்டு வா!
கழுதை போல உதைத்து கொண்டு வா!
பல்லி போல் ஒட்டிக்கிட்டு வா!
பறவை போல பறந்து வா!
நாய் போல ஒரு காலைத் தூக்கி வா!
ஆனால்......என்ன ஆனால்?
ஆனால், பதிவர் கூடத்திற்கு, எக்காரனத்தைக் கொண்டும்...
மனிதன் மாதிரி வராதே!

அய்யா!
தினமணி ஆசிரியர் அல்லது அவர்கள் REPRESENTATIVE- கள் வருவதாக ஒரு செய்தி. அவர்களுக்காக அசைவம் சாப்பாட்டில் இல்லையா? பாலும் அசைவம் தானே! அதை போடும்போது மீதி எல்லாவற்றையும் போட்டால் என்ன?
பெயரில் அன்பை வைத்துக்கொண்டு, இப்படி ஆடுமாடுகளின் மேல் அன்பில்லாமல் இருப்பது (?) நியாயமாரே? நாங்க வள்ளலார் வழி. ஒரு செய்தி தெரியுமோ? “நல்ல சைவச் சாப்பாடு சாதாரண அசைவச் சாப்பாட்டை விட நல்லாவும் இருக்கும், கொஞ்சம் காஸ்ட்லியாவும் இருக்கும்!என்கிறார் எங்கள உண(ர்)வுக்குழுத் தலைவர் சகோதரி இரா.ஜெயலட்சுமி! வந்து பாருங்க!
  1.  
பெயரில் அன்பு இருப்பதால் தான் நான் பசுவிடம் இருந்து [திருடும்] பால், மோர் அவைகளைக் கூட உண்பதில்லை. ஆடு, மாடு கோழி, பன்னி சாப்ப்டுவனுக்கு குழந்தைக்கு {கன்று} வைத்துள்ள அம்மாவின் (பசு) பாலை திருடுபவன் அயோக்கியன்.

ஒன்றுக்கும் உதவாதா அடி மாட்டை சாப்பிடுபவ்ன் யோக்கியன் . உங்க ஜெயலட்சுமி அம்மா பசுவிடம் இருந்து திருடாத பால் மற்றும் மோர் சமையாலா?
அய்யா! சாமிகளே! விட்டா காய்கறியக் கூடச் சாப்பிட விட மாட்டீங்க போல! ஆமா ஆடும் மாடும்தான் உயிரினமா? காய்கறி செடிகொடி மரம் எல்லாம் என்னவாம்? அவையும்உயிரினம்தான்அதாவது ஓரறிவுயிரினம்தான்என்று கண்டு சொன்னதற்காகத்தானே நம்ம போஸ் நோபல்பரிசு வாங்கினார் அதைத்தானே நம்ம தொல்காப்பியரும் அப்பவே சொன்னாரு? அப்பறம் எதத்தானய்யா சாப்பிடுறது? மண்புழு மாதிரியா?
  1.    அன்பேதமிழ் வியாழன், 8 அக்டோபர், 2015 ’அன்று’ 6:17:00 முற்பகல் IST
முனைவர் அய்யா!
இதுவரை நடந்த எல்லா பதிவர் சந்திப்பக்களும்--பதிவர்கள் நலனை நோக்கி நடந்தது என்பதே என் மதிப்பீடு!. அது பதிவர் மீட்டிங்கானலும் உணவு விஷயத்திலும் பதிவர்கள் நலன் நோக்கியே இருந்தது. எல்லா பதிவர் சந்திப்புக்கும் நான் ஒரே அட்ரெஸ் இல்லாத ஆளாக வந்திருக்கிறேன். புதுக்கோட்டைக்கும் வருவேன்.

அனால், இப்ப நடக்கும் புதுக்கோட்டை சந்திப்பு, ஒரு சிலர் (ஏன் ஒருவர் தான்) முன்னேற்றத்தை நோக்கியே செயல்படுகிறது.அவர் அவருடைய அஜெண்டவை அழகாக அரங்கேற்றுகிறார். அவருக்கு என்று ஒன்றும் அறியாதா அப்பாவி கூட்டம் ஏதும் அறியாமல் ஒத்து ஊதிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்[கள்] வள்ளலார் வழி என்றால் அது அவர் வீட்டோடு போகவேண்டும்! வள்ளலாரை யார் கொளுத்தினர்க்கள் என்பது ஊரே அறியும். அதை உங்களால் சொல்லமுடியுமா? இல்லை நீங்கள் உண்மையை சொன்னால் தான் ஊடகங்கள் உங்களை மதிக்குமா? (குறிப்பாக பார்ப்பன ஊடகங்கள்). என் கேள்வி? , Is Vallarar an authority of what we should eat? பயிதிக்கார உலகம். வள்ளலாரை கொளுதினவர்களின்----- அடிவருடிகள், நம்மாள் உள்பட, வள்ளலாரைப் பற்றி பேசக்கூடாது!

இந்த பதிவர் கூட்டத்தை நடத்துபவர், அவர் முன்னுக்கு வர "மட்டுமே" செயல்படுகிறார். சாப்பாட்டில் எல்லா கறியும் போடுங்கப்பா. ஆனால், மோர் மட்டும் பால் இருக்கும் பக்கம் எங்களுக்கு சாப்பிடும் இடம் வேண்டாம்!

என்னங்க நம்ம விழா! அதுவும் நம் அண்ணன் முத்துநிலவன் உயிரைகொடுத்து வேலை செய்து இருக்கிறாரர். மேலும், உங்களையும் சந்திக்கும் ஆசை எனக்கு இருக்கு.ம பார்ப்போம் நாளை. சில வரிகள் நம் தலைவர் முத்துநிலவன் உழைப்பப் பற்றி!

முத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்! இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்!

புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.

முத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க!

இதையும் வெளியிடுங்கள். முத்துநிலவன் புகழ் ஓங்குக!

முத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்! இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்!

புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.

முத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க!
ரொம்ப அருமையா PIN ஊட்டம் குடுக்குராரு.. ஆனா அவர் பிளாக்குதான்
'பிம்பிளிக்கே பிளாப்பின்னு'
தொறக்க மாட்டேங்குது.. ஒரு கோணி ஊசி வெச்சி போட்டு முயற்ச்சி பன்னுலாமான்னு யோசிக்கிறேன்..

Wednesday, 14 October 2015

முரளி அய்யாவுக்கு என்பதில்

 திருப்பதி மஹேஷின் வலைப்பக்கத்தில்

பின்னூட்டமிருந்த டி.என். முரளி அய்யாவுக்கு அதே பக்கத்தில்

பின்னூட்டமாக நான் தந்திருந்த பதில். கீழே

இதில் என்னைவிட இளையவர் என்ற காரணத்தினால் அல்ல

எனக்குள் அவரால் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே

உரிமை இருக்கிறது எனும்

நினைப்பாலும்

உள்ளிருக்கும்

அன்பாலும்தான்

'ன்' என்று குறிப்பிட்டுள்ளேன்..

தவறாக கொள்ளவேண்டாம்..


 
மன்னிக்கனும் அய்யா

நானெங்கே அவனை அழைத்து வந்தேன்

அழைத்தது அவன்

வந்தது இவன்

அவன் அழைத்ததுதான் உண்மை

நான் நினைத்தது அவனுக்கு

துணைக்கு அழைக்கிறானென்று.

கடைசியில்தான் தெரி(ளி)ந்தது

அவன் என்னை வழித்துணையாய்

அழைக்கவில்லை.

என்னை வழி நடத்திடத்தான்

அழைத்தானென்று.

அவனுக்கு இல்லாவிட்டாலும்

எனக்கிருக்கிறது. ஆண்டவன் மீது

நம்பிக்கை

அந்த நம்பிக்கையில் சொல்கிறேன்.

அந்த நாட்களில் என்னை ஆண்டவன்

அவன் தான்

ஆம் என் ஆண்டவன் அவன் தான்.

Monday, 5 October 2015

தேவை ஓர் வழிகாட்டி


வலைப்பதிவர் சந்திப்பு குறித்து பலரும் பல தகவல்களையும்

போதும் போதும்

என்கிற அளவுக்கு பதிந்து விட்ட போதும்

சில அனுபவங்களை கொண்டு

எனது ஆலோசனைகளை முன் வைக்கின்றேன்..

1) அரங்கிற்குள் புகைக்கு மட்டுமல்ல புகைப்படத்திற்கும் அனுமதி

கூடவே கூடாது... காரணம் கையில் புகைப்படக் கருவி (அல்லது கைபேசி)

இருக்கிறது என்பதற்காகவே தங்கள் விருப்பப்படி கண்டதையெல்லாம்

புகைப்படமாக எடுத்து வெளியிடுவதென்பது புதிதாக தோன்றி விட்ட ஒரு

கலாச்சாரமாக மாறிவிட்டது. இதனால் பதிவர்கள் நேரடியாகவும் விழா

நடத்துனர்கள் மறைமுகமாகவும் பெரிதும் பாதிக்கப்படுவர்..


2) வெளியூரிலிருந்து வரும் பதிவர்களுக்காகவே நடைபெறும் இவ்விழா

நடைபெறும் வளாகத்திற்கு வர தேவையான வழிகாட்டுதல் தொலை மற்றும்

அலைபேசி எண் (உடன் எளிதாக வர வாய்ப்பிருந்தால் வரைபடத்துடன்)

தருதல் நன்று  இதனால் பதிவர்கள் சிரமம் குறையும்.


3) பதிவர் சந்திப்பு எனும் நிகழ்வு முழுமை பெற வேண்டி இதை பகிர்கிறேன்.

பல பதிவர்கள் தாம் விரும்பும் சில பதிவர்களை சந்தித்து அளவளாவலாம் 

அல்லது அளவில்லாமல் உரையாடலாம் எனும் அவாவில் வருவர். அவர்தம்

எதிர்பார்ப்பை ஓரளவேனும் பூர்த்தி செய்ய சிறு இடைவேளைகள் குறைந்தது

இரண்டாவது தர வேண்டும்.


4) பதிவர் அனைவரும் மேடையேறி தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச

(வேண்டும் எனும் சிலர் குரல் கேட்கிறது ஆயினும்) வாய்ப்பு இருக்குமா?

எனவே அருள் கூர்ந்து பேச விரும்பும் பதிவர்களை மட்டும் மேடையில் பேச

அழைக்க வேண்டுகிறேன்.


5) பதிவர் சந்திப்பில் மேடையேறுபவர் பதிவர் தான் எனும் கட்டுப்பாடு

(விருந்தினருக்கு விலக்களிக்கலாம்)  விழா நடத்துனர்களுக்கு

ஏற்படக்கூடிய தர்மசங்கடங்களை தவிர்க்கவே இந்த ஆலோசனை..