Tuesday, 17 November 2015

ஒரு 'முன் கதை சுருக்கம்'

முந்தைய அப்பாவி ஆறுமுகமும் அவனது கடவுள்களும்... 

எனும் பதிவு 

இந்த மழை சூழ்ந்த நிலையில் அதுவும் நம் அன்புக்குறிய மீசைக்காரர் கில்லர்ஜி பற்ற வைத்த கடவுளை கண்டேன். எனும் (பட்டாசு) தொடர்பதிவின் தொடர்ச்சியோ!!!  எனும் ஐயம். சில அன்பர்களுக்கு ஏற்பட்டதை அறிந்தேன்.

அதன் விளைவே இவ்விளக்கத்துடன் கூடிய ஒரு சிறு
  'முன்கதை சுருக்கம்'

கடந்த பதிவில் ஆரம்பத்தில் ராஜ்குமார் எனும் ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போது அவனுக்கும் அவ
து அதிகாரிக்கும் நடந்த உரையாடலை பதிவிட்டிருந்தேன்..

அதற்கு முன் நடந்த சிலவற்றை தொடரினூடே சொல்ல நினைத்தேன். ஆனால் நம் அன்பு கில்லர்ஜி அவர்களின் முயற்சியால் சுறுசுறுப்பாகி உள்ள நம் பதிவுலக அன்பர்கள் குழம்ப வேண்டாமென்பதால் மிக மிக
சுருக்கமாக ஒரு முன்கதை சுருக்கம்...

நாட்டில் மிக பலமாக வேரூன்றி மூலைமுடுக்கெல்லம் கால் பதித்துள்ள ஒரு பெரும் நிறுவனத்தின் கிளையில்தான் ராஜ்குமார் பணிபுரிந்து வந்தா
ன். அவது அலுவலகம் மற்றும் சுற்று சூழல் காரணமாக அந்த நிறுவனத்தின் வேறு ஒரு கிளைக்கு மாறுதல் கேட்டு விண்ணப்பித்தான். அத்துடன் அதை மறந்துவிட்டு தன் அன்றாட அலுவலக பணிகளில் மூழ்கி விட்டிருந்தான்..

அந்த சூழலில்தான் அவ
னுக்கு விருப்ப மாறுதல் உத்தரவு வந்த தகவலை அவது அதிகாரி அவனுக்கு சொன்னார்..

முன் ஜாக்கிரதையுடன் ஓர் பின்குறிப்பு : இது அண்மையில் ஏற்பட்ட மழை , புயல், கில்லர்ஜியின் கடவுள், மற்றும் சில படிப்பினைகள் தந்த அனுபவங்களின் தொடர் அல்ல.. 


ஒருவனுக்கு  பாதிப்பு ஏற்படும்போது 

யாரெல்லாம் உடன் வருவார்கள்.,?

யாரெல்லாம் எட்டி நின்று பரிதாபப்படுவார்கள்.,?

யாரெல்லாம் பரிகசிப்பார்கள்.,? 

எனும் 

உண்மையை 

உணரச் செய்யும் ஒரு சிறு முயற்சியே.. இதில் என்னால் இயன்றவரை கலப்படமின்றி உண்மை சொல்ல முயல்கிறேன். 

இது கில்லர்ஜியின் பதிவின் தொடர்ச்சி அல்ல என்பது உண்மை. அதே நேரத்தில் தொடர்பற்றது என்றும் சொல்லி விட முடியாது. அவர் கனவில் வந்தது ஒரே கடவுள். ஆனால் நம் ஆறுமுகத்தை சந்தித்ததும், சோதித்ததும் பல கடவுள்கள்..

மற்ற விவரங்களுக்கு சற்று பொறுத்திருப்போமே...!Sunday, 15 November 2015

அப்பாவி ஆறுமுகமும் அவனது கடவுள்களும்...

இதே போல் 2011 ல் ஒரு நவம்பர் மாதம் ஒரு சனிக்கிழமை காலையில்.....

ராஜ்குமார் சற்று சோம்பலான பேர்வழி.. அவனுக்கு அதிகாரியிடமிருந்து அலைபேசியில் ஓர் அவசர!!! அவச.. (மன்னிக்க) ரச...ரசமான காலை அழைப்பு..

நடந்த சம்பாஷனைகளை இங்கே பகிர்கிறேன்.

ராஜ்குமார் : அய்யா வணக்கம்..

அதிகாரி  :உன் வணக்கத்தை தூக்கி குப்பைல போடு.

ரா: என்ன அய்யா ஆச்சு ?

அ : என்ன ஆகலை?. உன் விருப்பப்படி உனக்கு விருப்ப மாறுதல் வந்திருக்கு. இப்ப உனக்கு சந்தோஷம்தானே?.

ரா: அய்யா என் குடும்ப சூழ்நிலை காரணமாக.., விண்ணப்பம் கொடுத்தேன்., என்ன ஆச்சுங்கய்யா?

அ:அதெல்லாம் எனக்கு தெரியாது. உத்தரவு வந்திருக்கு அதோட உனக்கு பதிலாய் இன்னொரு ஆளையும் போட்டாச்சு. நானென்ன பன்னுறது.

ரா: அய்யா என் குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான் நான் மனு செய்தேன். இப்போது நான் என்ன செய்ய வேணும் சொல்லுங்க...

அ:நீ ஒன்னும் செய்ய வேண்டாம். உன்னை நம்பி வந்தேன் பாரு?!,?!,!!! அதுக்கு இது வேண்டியதுதான்.

ரா: இல்லை அய்யா நீங்க சொன்னால் என் விருப்ப மாறுதல் விண்னப்பத்தை ரத்து செய்ய விண்ணப்பம் செய்கிறேன்.

அ: அதெல்லாம் முடியாது. உனக்கு பதில் போட்ட ஆள். நாளை மறுநாள் வருவார். அவர் வந்தால் உன்னை வேலையில் இருந்து விடுவிப்பதை தவிர எனக்கு வேறு வழியில்லை.....

மற்றவை பிறகு...

(குறிப்பு) இதில் எங்கே அந்த அப்பாவி ஆறுமுகமும் அவனது கடவுள்களும் என்று கேட்கிறீர்களா?

விரைவில் வருவான் தொடருங்கள்..

தவறு செய்து விட்டு தப்பிக்க முயலும் பலரைப்போல் அல்லாமல்..

தன் பணியை ஒரு வேள்விபோல் செய்த அவன் வாழ்வை விளக்கவும் நம் அறியா மெய்யை விலக்கவும் தானிந்த முயற்சி...

Saturday, 7 November 2015

இதோ என் பதில்எனக்கு யாரையும் காயப்படுத்தி பழக்கமில்லை. கா'ரணம்' காயம் தானாக ஆறும்.. ஆனால் 'ரணம்'.. நான் சொல்ல வருவது உடலுக்கு ஏற்படுத்தப்படும் காயம் அல்ல எவர் மனதையும் காயப்படுத்தக்கூடாது. என்பதை ஒரு கொள்கையாகவே கொண்டிருப்பவன் நான் அதற்காக எல்லா நேரங்களிலும் என்னால் அமைதியாக இருக்க முடியுமென்று சொல்ல நானொன்றும் புத்தனோ. அல்லது சித்தனோ இல்லை அவர் மொழியில் சாதா'ரண' பித்தன்.

விளையாட்டாய் நானிட்ட ஒரு பின்னூட்டம் (நான் மிகவும் மதித்த)  ஒருவரை காயப்படுத்துமென்றால்.. அவர் அதற்கிட்ட மறுமொழி? அதையும்தானே அவர் வெளியிட்டிருக்க வேண்டும்.

சரி போகட்டும் அதற்க்கு முன் அவர் வெளிப்படுத்திய ! பதிவர் சங்கம் தேவையா? என்ற பொருள் நிறைந்த பதிவில் என்னைப்போல் அல்ல என்னை வைத்து குளிர்காய நினைத்த ஒரு மஹாத்மாவின் கருத்துரையை வெளியிட்டிருந்தார். ஆனால் அதைக்கண்டு அதே பதிவில் அந்த கருத்து குறித்து நான் தெரிவித்திருந்த கருத்துரையை ஏனோ வெளியிடவில்லை. சரி அவர்தளம் அவர் விருப்பம் என்று விட்டுவிட்டேன். அதற்கு முன்னதாகவே ஒரு மாபெரும் மனிதர் குறித்து அவர் வெளியிட்டிருந்த ஒரு விடயம் அவர்மேல் நான் கொண்டிருந்த பிம்பம் சரியத்துவங்கிவிட்டது தனி சோகம். ஆனாலும் அவர்மேல் கொண்ட அன்பை நான் இதுவரை திரும்பப் பெறவில்லை இனியும்....

அவருக்கு புரியும் மொழியில் சொல்ல யோசிக்கும்போதுதான் ஒரு கதையை கண்டேன். மன வலியுடன் சிந்திப்பதைவிட வேரொரு பதிவரின் கதையை வெளியிடுவதென்பது அந்த நேரத்தில் எனக்கொன்றும் தவறாகப்படவில்லை.

இதோ அந்த கதை

Friday, 23 October 2015

சத்தியமா இது என் கதை இல்லீங்கோவ்!!!!!

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...

கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்...

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ..


நன்றி..

 http://www.yarl.com/forum3/topic/119868-படித்ததில்-பிடித்த-குட்டி-கதைகள்/

1 comment:

சிறப்பான குட்டிக் கதை . பாடம் சொல்லும் கதை


தன் இணைப்பு வேலை செய்யவில்லை என்றால் உலகமே இருண்டு விட்டது என்று சொல்ல நானொன்று அதிகம் படித்தவனில்லை.

கா'ரணம்' நான் பாமரன்

அந்த நேரத்தை வேறு உபயோகமான வேலை செய்ய ஆண்டவன் என்னை பணித்ததாக எண்ணி  வேறு வேலை என்ன இருக்கிறதோ அதை பார்பவன். எதுவும் இல்லாவிட்டால் ஆடு மாடு மேய்ப்பதையும் சந்தோஷமாக செய்ய முற்படுபவன்.. எனக்கு வேறு என்ன தெரியும்.

கா'ரணம்' நான் பாமரன்.  

ஆனால் மற்ற தளங்களுக்கு சென்று பிண்ணூட்டம் மட்டும் இடத்தெரிந்த மேதை அல்ல..

கா'ரணம்' நான் பாமரன்.