Saturday, 7 November 2015

இதோ என் பதில்எனக்கு யாரையும் காயப்படுத்தி பழக்கமில்லை. கா'ரணம்' காயம் தானாக ஆறும்.. ஆனால் 'ரணம்'.. நான் சொல்ல வருவது உடலுக்கு ஏற்படுத்தப்படும் காயம் அல்ல எவர் மனதையும் காயப்படுத்தக்கூடாது. என்பதை ஒரு கொள்கையாகவே கொண்டிருப்பவன் நான் அதற்காக எல்லா நேரங்களிலும் என்னால் அமைதியாக இருக்க முடியுமென்று சொல்ல நானொன்றும் புத்தனோ. அல்லது சித்தனோ இல்லை அவர் மொழியில் சாதா'ரண' பித்தன்.

விளையாட்டாய் நானிட்ட ஒரு பின்னூட்டம் (நான் மிகவும் மதித்த)  ஒருவரை காயப்படுத்துமென்றால்.. அவர் அதற்கிட்ட மறுமொழி? அதையும்தானே அவர் வெளியிட்டிருக்க வேண்டும்.

சரி போகட்டும் அதற்க்கு முன் அவர் வெளிப்படுத்திய ! பதிவர் சங்கம் தேவையா? என்ற பொருள் நிறைந்த பதிவில் என்னைப்போல் அல்ல என்னை வைத்து குளிர்காய நினைத்த ஒரு மஹாத்மாவின் கருத்துரையை வெளியிட்டிருந்தார். ஆனால் அதைக்கண்டு அதே பதிவில் அந்த கருத்து குறித்து நான் தெரிவித்திருந்த கருத்துரையை ஏனோ வெளியிடவில்லை. சரி அவர்தளம் அவர் விருப்பம் என்று விட்டுவிட்டேன். அதற்கு முன்னதாகவே ஒரு மாபெரும் மனிதர் குறித்து அவர் வெளியிட்டிருந்த ஒரு விடயம் அவர்மேல் நான் கொண்டிருந்த பிம்பம் சரியத்துவங்கிவிட்டது தனி சோகம். ஆனாலும் அவர்மேல் கொண்ட அன்பை நான் இதுவரை திரும்பப் பெறவில்லை இனியும்....

அவருக்கு புரியும் மொழியில் சொல்ல யோசிக்கும்போதுதான் ஒரு கதையை கண்டேன். மன வலியுடன் சிந்திப்பதைவிட வேரொரு பதிவரின் கதையை வெளியிடுவதென்பது அந்த நேரத்தில் எனக்கொன்றும் தவறாகப்படவில்லை.

இதோ அந்த கதை

Friday, 23 October 2015

சத்தியமா இது என் கதை இல்லீங்கோவ்!!!!!

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...

கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்...

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ..


நன்றி..

 http://www.yarl.com/forum3/topic/119868-படித்ததில்-பிடித்த-குட்டி-கதைகள்/

1 comment:

சிறப்பான குட்டிக் கதை . பாடம் சொல்லும் கதை


தன் இணைப்பு வேலை செய்யவில்லை என்றால் உலகமே இருண்டு விட்டது என்று சொல்ல நானொன்று அதிகம் படித்தவனில்லை.

கா'ரணம்' நான் பாமரன்

அந்த நேரத்தை வேறு உபயோகமான வேலை செய்ய ஆண்டவன் என்னை பணித்ததாக எண்ணி  வேறு வேலை என்ன இருக்கிறதோ அதை பார்பவன். எதுவும் இல்லாவிட்டால் ஆடு மாடு மேய்ப்பதையும் சந்தோஷமாக செய்ய முற்படுபவன்.. எனக்கு வேறு என்ன தெரியும்.

கா'ரணம்' நான் பாமரன்.  

ஆனால் மற்ற தளங்களுக்கு சென்று பிண்ணூட்டம் மட்டும் இடத்தெரிந்த மேதை அல்ல..

கா'ரணம்' நான் பாமரன்.


23 comments:

 1. ஒன்றும் புரியவில்லை! ரணம் ஆறட்டும்! குட்டிக்கதை சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 2. நன்றி சுரேஷ்..
  என் மனக் காயத்தை கண்டும் காணாமல் பலர் சென்ற நிலையில்
  பிண்ணூட்டமாக தாங்கள் தந்த மருந்து நிச்சயம் பல ரணங்களை ஆற்றும்..

  ReplyDelete
 3. வணக்கம் நண்பரே பின்புலம் எனக்கு முழுமையாய் அறியவில்லை இருப்பினும் தங்களது மனக்காயம் விரைவில் ஆற ஆறாவது பூதம் துணை புரியட்டும்
  கதை மிகவும் நன்று

  ReplyDelete
  Replies
  1. எத்தனையோ பணிகளுக்கிடையேயும் எம்மை எட்டி பார்த்த அன்புக்கு நன்றி. தவறு என்பதை நாம் தெரியாமல் கூட செய்யக்கூடாது. என்ற உறுதி இருந்தால். நம் வழி நேராகத்தானே இருக்கும். நாம் நேர்வழியில் செல்லும்போது சில இடர்பாடுகள் வரத்தான் செய்யும். அய்யாவை பொறுத்தவரை நான் அவரை எப்போதோ முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்டேன். ஆனால் அவர் தளத்தில் அவரிட்ட பதிவைக்கண்டு ஆனந்தமாக நானிட்ட பின்னூட்டம்.., அவர் பார்வையில் மட்டுமே அநாகரிகமாக தென்பட்டுவிட்டது.,

   அவர் (இந்த வயதில் செய்யும்) குறும்புத்தனங்களை மற்றவர் ரசிப்பது போலத்தான் நானும் செய்தேன். மற்றபடி அவரை நோகடிக்க வேண்டும் எனும் நோக்கம் எனக்கு இல்லை. இதைக்கூட தாங்கள் கேட்டதாலேயே பகிர்கிறேன்.. என் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் தாங்கள்.,,, தங்கள் மனம் நோகும்படி செய்வேனா?....

   Delete
  2. முதலில் ஒவ்வொரு பதிவரின் பின்னூட்டங்கள் எப்படி எழுதுகின்றார்கள் என்பதை நன்கு புரிந்து கொள்ளவேண்டும் நான் ஆரம்பம் முதலே அனைவருக்கும் நையாண்டியாகத்தான் கருத்துரை எழுதுவேன் அதேபோல மறுமொழியும் கொடுப்பேன் இது தற்போது பலருக்கும் புரிந்து விட்டது ஐயா எப்பொழுதுமே நையாண்டியாகத்தான் எழுதுவார் தாங்களும் இதை மறந்து வழக்கமான பதிவுகளுக்கு திரும்ப வேண்டுகிறேன் - அன்புடன் கில்லர்ஜி

   Delete
  3. அன்பை மட்டுமே எதிர்நோக்கும் உம்
   அன்புக் கட்டளைக்கு அடிபணியாமல் இருக்க முடியுமா?
   உங்கள் வார்த்தையில் சொல்வதென்றால்

   'நாளையே எம் ம'ரணம்' நிகழுமென்றாலும்
   எனக்கு கவலை இல்லை.

   கா'ரணம்' எனக்கு உள்ள சொந்தங்கள் மேலிருந்த பற்றெல்லாம் பறந்து விட்டது.அதற்கு கா'ரணம்' இந்த இனிய இணைய தள சொந்தங்கள் தான்.

   நான் தவறாக ஏதும் செய்ய மாட்டேன்.., எனும் அன்பில் இருமுறை வந்து கருத்திட்டமைக்கு நன்றி

   Delete
 4. புரிதல் இல்லையெனில் சிரமம் தான் சார்..

  ReplyDelete
 5. ஸ்ரீ ராம் சொல்லி இருப்பதைப் போல் ,உங்கள் கருத்துக்கு பின் ஒரு ஸ்மைலி சிம்பல் போட்டிருந்தால் ,சரியான புரிதலாய் இருந்து இருக்கும் ! அவர் தளத்தில் நானிட்ட கருத்து இதோ ...அன்பே சிவமே வந்து தன்னிலை விளக்கம் அளித்து விட்டார் ,அய்யா அவர்கள் ,நடந்ததை கெட்ட கனவாய் நினைத்து மறப்பதே நல்லது ! இன்னும் ஏன் மௌனம் அய்யா :)
  அய்யா ,தன் மௌனத்தைக் கலைப்பார் என்று நம்புகிறேன் :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜி யார் பக்கம் நியாயம் யாரிடம் தவறு என்றெல்லாம் எடைபோட்டுக்கொண்டிருக்காமல் ஏற்பட்ட காயத்திற்கு ஓடிவந்து முதலுதவி செய்த எல்லா மனங்களுக்கும் நன்றி..

   Delete
 6. உங்களது பதிவு மற்றும் சுட்டிக் காட்டிய சிறுகதை மூலம் ‘அன்பே சிவம்’ என்பதனை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். மேலும் அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்களது பதிவிலும் தங்களது சூழலை நன்கு விளக்கி “எல்லாம் நன்மைக்கே” என்ற அமைதியோடு உங்கள் உண்மை உள்ளத்தை திறந்து காட்டி விட்டீர்கள். இனி இருவருக்குள்ளும் கருத்து பிணக்குகள் வராது என்று நினைக்கிறேன். எல்லாம் நன்மைக்கே!

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா யார் பக்கம் நியாயம் யாரிடம் தவறு என்றெல்லாம் எடைபோட்டுக்கொண்டிருக்காமல் ஏற்பட்ட காயத்திற்கு ஓடிவந்து முதலுதவி செய்த எல்லா மனங்களுக்கும் நன்றி..

   Delete
 7. புரிதல் இன்மையால் ஏற்பட்ட தர்மசங்கம்
  வருந்த வேண்டாம் நண்பரே

  ReplyDelete
 8. இது மிகச்சாதாரணம் ஐயா.... நான் கூட பதிவுலகத்துக்கு வந்த புதிதில் நான் எழுதிய பின்னூட்டங்களாலும் எனக்கு வந்திருந்த பின்னூட்டங்களாலும் மனக்கவலை கொண்டுள்ளேன்.. ஓரிரு நட்புக்களை இழந்திருக்கிறேன்.... அதற்காக நம் கருத்தை சொல்வதில் தவறில்லை. வெளியிடுவதும் வெளியிடாததும் அவரவர் இஷ்டம். நம்முடைய கருத்து சம்பந்தப்பட்டவர்களுக்குப் போய்ச் சேர்ந்தால் சரி... அதேபோல் நம் பதிவுக்கு மற்றவர்களின் கருத்துக்களையும் மதிக்கவேண்டும். மாற்றுக்கருத்தாக இருந்தாலும் வெளியிடவேண்டும். தேவையிருப்பின் அதற்கு மறுப்பு தெரிவித்து பதில் அளிக்க வேண்டும்....

  இது என் நிலைப்பாடு... மற்றபடி தங்களது இந்தப் பதிவுக்கான ஆதங்கத்தின் அர்த்தம் விளங்கவில்லை.... கவலை கொள்ளவேண்டாம்....

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகையுடன்
   கருத்துரைக்கும் ஆறுதலான வார்தைகளுக்கும் நன்றி ஸ்பை

   'பட்டாசு வெடிக்கும்போது பத்திரம்'

   தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

   Delete
 9. இது போன்ற 'ஊடல்'களுக்குப் பின்னான உறவு / நட்பு முன்னிலும் வலுவாக இருக்கும். இது என் அனுபவம். நலமே விளைக!

  :)))

  ReplyDelete
  Replies
  1. வருகையுடன்
   கருத்துரைக்கும் ஆறுதலான வார்தைகளுக்கும் நன்றி

   'பட்டாசு வெடிக்கும்போது பத்திரம்' அதுக்கெல்லாம் ஸ்மைலி போடமுடியாது சார் மருந்துதான் போடனும். :)))

   தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

   Delete
 10. ஈ மெயில் சப்ஸ்கிரிப்ஷன் விட்ஜெட் வைக்கலாமே..

  ReplyDelete
 11. ஐயா

  தங்களுடைய மொழி வித்தியாசமாக இருக்கிறது. முதலில் நைனா என்ற சொல். இது பல சமயங்களில் பல அர்த்தங்களைக் கொடுக்கும். அய்யாவுக்கு நைனா என்ற சொல் ஒரு சென்னை தாதாவின் மிரட்டலாகத் தோன்றுகிறது. இரண்டாவது கருத்து. நீங்கள் கூறிய கருத்து (திருக்குறள் ஒரு வரியில்) உங்களுக்கு வேண்டுமானால் புரிந்திருக்கலாம். என்னைப்போன்ற சாதாரண வாசகர்களுக்கு புரியவில்லை. இணைய இணைப்பு இல்லை என்று கூறுவதில் திருக்குறள் எங்கே வந்தது. ஐயா குறளோ குறளைப் பற்றியோ எழுதவில்லையே.

  நானும் ஐயாவைப் பல சமயங்களில் கலாய்திருக்கிறேன். ஆனால் அவர் அதைப் பற்றி குறை சொல்லவில்லை. காரணம் நான் கூடிய வரை பல அர்த்தங்கள் உள்ள வார்த்தைகளை உபயோகிப்பதில்லை, வட்டார வழக்கு சொற்களையும் தவிர்த்திருக்கிறேன்.

  ஐயாவுக்கு அடிக்க உரிமை உண்டு. அவர் உங்களை கடிந்தது இது போன்று மற்றவர்கள் பதிவில் பின்னூட்டம் இடக் கூடாது என்பதற்காகத்தான்.

  --
  Jayakumar

  ReplyDelete
 12. முதலில் தங்கள் பிண்ணுட்டத்தை தாமதமாக வெளியிட்டதற்கு வருந்துகிறேன். நேற்று முற்பகலில் குடும்பத்துடன் வெளியில் சென்றவன். இன்று காலைதான் வீடு திரும்பினேன். அதனால்தான் தாமதம்.

  முதல் வருகைக்கு நன்றி அய்யா! ஆயுத பூஜையன்று அன்று அவர் பதிவை காலை சுமார் 5.30 மணிக்கு கண்டு அன்று சேவையே தன் வாழ்வாக மற்றிக்கொண்ட ஒரு தாயை சந்திக்க புறப்படும் வேளையில் கண்டதும் இதையும் ஒரு பதிவாக்கி விட்டாரே. என்று தான் அவ்வாறு பதிந்தேன். மேலும் அவர் பதிவிலும் சென்று விளக்கிவிட்டேனே! தாங்கள் காணவில்லையா? அல்லது..

  நைனா! என்ற சொல்லுக்கு யார் என்ன அர்த்தம் சொன்னாலும் அது தந்தையை மகன் அழைக்கும் அன்பு நிறைந்த சொல். அந்த வார்த்தையில் உள்ள ஜீவனை அழித்தவர்கள் அறிய வாய்ப்பில்லை. வேண்டுமானால் தங்கள் ஊரில் தந்தையை அழைக்கும் வார்த்தையை அறிமுகப்படுத்தினால் ஏற்றுக்கொண்டு என் அன்புக்குறியவர்களை அவ்வாறு அழைக்கிறேன்.

  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
 14. அன்பே சிவம் என்று தாங்களே இருக்கையில் , நிச்சயமாக நீங்கள் புரிந்து கொள்ளப்படுவீர்கள்.புதிய பாலங்கள் அமைக்கப்படும்!சுமந்ததைப் பகிர்ந்து கொண்டாயிறு இனி பாரம் இல்லை.வாழ்த்துகள்

  ReplyDelete
 15. அன்பே சிவம்,

  என்ன நடந்தது, என்ன நடக்கின்றது? கில்லர் சொன்னதுபோல் பின்புலம் அறியாதவன் நான்.

  எது நடந்தாலும் கவலையை விட்டு விட்டு பதிவில் கவனம் வையுங்கள்.

  நம்மை புண் படுத்துவதாக நினைத்து சிலர் அவர்களையே அசிங்கபடுத்திகொள்வது, நாம் பார்த்திருப்போமே.

  உங்களின் உயர்வான எண்ணங்கள் சிந்தனைகள் சிலருக்கு புரிய சில நாட்கள் ஆகலாம்.

  போயிட்டு பாம்பே ஆனந்த பவனில் இருந்து ஒரு அரை கிலோ பால்கோவா வாங்கி வீட்ல எல்லோருடன் சேர்ந்து சாப்டுட்டு அடுத்தபதிவை ஆரம்பியுங்கள்.

  அன்புடன்

  கோ

  ReplyDelete