Thursday, 24 December 2015

புலிமேட்டில் ஒரு புதுக் குற்றாலம்





 நீரில்லாத ஆறு,
சாமியில்லாத கோவில்,
இப்படி ஒரு ஊரு அதுதான் வேலூரு.
அப்டீன்னு சொல்லி கிண்டலடிச்ச மக்களே... !

உங்க கிண்டலை பொறுத்து கொள்ள முடியாத வானம் கொட்டித் தீர்த்தது. அதன் பலனாக இதுவரை வெளியே தெரியாமல் இருந்த ஒரு குட்டிக் குற்றாலம் இப்போ வெளிப்பட்டிருக்கிறது. வேலூருக்கும் அணைக்கட்டுக்கும் இடையில் ஊசூர் எனும் கிராமத்தின் அருகில் உள்ள ''புலிமேடு'' எனும் அழகிய அமைதியான சிற்றூரை ஒட்டியுள்ள 'பெரியமலை'' எனும் ஜவ்வாதுமலையின் தொடர்ச்சியாக உள்ள மலையடிவாரத்தில் அன்மையில் பெய்த பெருமழையின் பலனாக ஒரு நீர்வீழ்ச்சி வெளிப்பட்டுள்ளது.



இத்தனை அருமையான இடம் இதுவரை வெளி உலகம் அறியாமல் இருந்துள்ளது. ஒருவகையில் அது நன்மையே. இதோ மணிதர்கள் பார்வைக்கு தெரிய வந்ததும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைவரும் குடும்பத்துடன் வந்து அருவியில் குளித்து களித்து செல்கின்றனர். அதோடு விட்டால் மகிழ்ச்சியே.

ஆனால்....?!

நட்பு வட்டாரத்துடன் வரும் பலர் சற்றும் மற்றவர்கள் பற்றிய அக்கறை இன்றி தங்கள் மனம் போனபோக்கில் கையோடு கொண்டு வரும் தின்பண்டங்கள். மற்றும் இத்யாதி பொருட்கள் அடங்கிய கழிவுகளை வீசிச்செல்வதும் இயற்கை வரமாக தந்த நீரில் சோப்பு,ஷாம்பு,மற்றும் சீயக்காய்தூளை பயன்படுத்தி அசுத்தப்படுத்துவதும் வேதனையளிக்கிறது.

இப்படி ஒரு அழகிய நீர்வீழ்ச்சி உள்ள இடத்தில் மூத்தகுடிமக்கள், பெண்கள், மாற்று திறனாளிகள், மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கென உரிய ஏற்பாடுகளை செய்தால் நன்றாக இருக்கும்.

பின் குறிப்பு : அழகிய நீர்வீழ்ச்சியை எடுத்த படங்களை தெளிவாக பதிவிட இயலவில்லை. அதன் காரணமாகவே சிறியதாக தந்துள்ளேன்.



7 comments:

  1. புகைப்படத்தில் ஒன்றும் தெரியவில்லையே நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. புகைப்படங்களை இணைத்து பதிவிட முடியவில்லை நண்பரே. காரணமும் தெரியவில்லை. ஆனால் பதிவில் உள்ள படங்கள். ஓரளவுக்காவது தெரிகிறது. யாராவது உதவுவார்கள், காத்திருக்கிறேன். வேறு வழி?.

      Delete
  2. படங்களில் தெளிவில்லை நண்பரே

    ReplyDelete
  3. சிவம் படங்கள் தெளிவாக இல்லை..சரி பேசுகின்றேன்...உங்களிடம்..

    ReplyDelete
  4. சிவ சக்தி,

    நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

    புத்தாண்டு உங்கள் வாழ்வில் மத்தாப்பு மகிழ்ச்சியை கொண்டுவரவும் பல புதிய நன்மைகள் மலர செய்யவும் அன்புடன் வாழ்த்துகிறேன்.

    கோ

    ReplyDelete
  5. அன்பினும் இனிய நண்பரே
    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
    இணையில்லாத இன்பத் திருநாளாம்
    "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. இப்போ அந்த ஊற்று என்னாவாகி இருக்குமோ.......?????

    ReplyDelete